இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
19
பொது வாழ்த்துடன் நூலை முடிக்கின்ற ஆசிரியர், அவையடக்கமாக “நபிகளின் நல்லுரைகளைத் தெரிவிக்க நானறிவு பெற்றிருக்கவில்லை" என்று கூறினாலும், இதுவரை நபிகள் குறித்துத் தமிழில் வந்துள்ள நூல்களில், சாதாரண மக்களும் பயின்று பின்பற்றக்கூடிய வகையில் அமைந்துள்ள கவிதை நூல் இது ஒன்றே என்பதில் ஐயமில்லை.
தமிழகத்தின் தலைசிறந்த கவிஞராகிய திரு. கவி காமு ஷெரீப், இத்தகு நூல்கள் பலவற்றை மேலும் வெளியிட்டுச் சமய உலகமும், தமிழுலகமும் பயன்பெறத் தொண்டாற்ற வேண்டும் என்று இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.
லால்குடி
அன்புள்ள
16-6-73
கீரன்