________________
21 நபிகள் நாயகத்தின் உள்ளத்தையும் செயல்களையும் ஒருங்கே வெளிப்படுத்துகிறது இந்நூல். "தன்னலம் மறந்து பிறர் நலத்துக்காகப் பாடு பட்டவர்; துயரிடை அகப்பட்டும் தூயவழி நின்றவர்; மக்கள் சுகப்படத் தான் அடிபட்டவர்; கல்லிலும் செம் பிலும் இறைவன் இல்லையெனக் கழறியவர்; கல்லாமை தொலைய உழைத்தவர்; ஊராண்டதோடு மக்கள் உள்ள மெலாம் ஆண்டவர்: தொண்டரினும் தொண்டராய்த் தொண்டு செய்தவர்; இசுலாம் நிலைபெறத் தண் டெடுத்துத் தளபதியும் ஆனவர்; பேச்செல்லாம் செயலாக்கிப் பெருமை கொண்டவர்" என்பன போன்ற சொல் வரைவுகளால் பெருமானாரின் பெருமைமிகு ஓவியத்தைப் படிப்போர் மனத்திலே வரைவதில் கவிஞர் முழு வெற்றி பெற்றுள்ளார். புவிபோற்றும் முஹம்மதரின் தொண்டுகளில் துளியைப் புகன்றுள்ளேன்; அவர் செய்த (து) அனைத்தையுமே எடுத்து நவிலுதற்கு நானறிவு பெற்றிருக்க வில்லை" எனத் தன்னடக்கத்தோடு கவிஞர் கூறியிருந்தாலும், அவர் பெருமானாரின் அரும்பெரும் செயல்களையும் சிந்தனைகளையும் நிரல்பட அழகு தமிழில் உள்ளம் கொள்ளை கொள்ளத்தக்க வகையிலே எடுத்துரைப்பதை நூலைப் படிப்போர் நன்குணர முடியும். பெருமானார் மொழிகளைக் கவிஞர் தம் சொல்லால் சொல்வதை இங்கே காணலாம்; பெருமானாரின் பொன்மொழிகள்: பசித்தோர்க்கு உணவும் இன்சொலும் வழங்குவதே இசுலாம். உழைக்காமல் வாழுவதும் உண்ணும் போது தனித்து உண்பதும், பிழைக்க எண்ணிப் பொய்யுரைத் தலும், பித்தலாட்டம் கொலை களவு செய்தலும் இசுலாம் ஆகாது. பலன் கருதாது தொண்டு செய்வதே .