உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நபியே எங்கள் நாயகமே 1984.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

கஃபா வாழ்த்து

ஆதாபி தொழுதயிடம்
இப்றாகீம் மற்றும்
அவர்மைந்தர் இஸ்மாயில்
தொழுதிட்ட பள்ளி
மூதறிஞர் மூமீன்கள்
முஹம்மதுர்ர சூல்நபியும்,
மூர்சலீன்க ளுடனே
அவருடைய வழியார்
போதமுற என்றைக்கும்
ஐவேளைத் தொழுகை
புரிகையிலே மறவாமல்
நினைவில்கொண் டொழுகும்
நாதனருட் தலமான
கஃபாவைப் போற்றி
நாளெல்லாம் போதமுற
வாழ்த்திடுவாய் நெஞ்சே.