இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை
ஆமீனா வாழ்த்து
மூவுலகும் போற்றுகின்ற
முஹம்மதரைத் தமது
மணிவயிற்றில் சுமந்திருந்த
மாண்புநிறை மாதா
மேவுமுயர் வானவரும்
அரம்பையரும் வாழ்த்தும்
மேலான தூய்தான
வாழ்வுடைய அன்னை
நாவுடையார் வாய்மணக்க
நாளும்புகழ்ந் தேத்தும்
நலமுடைய நாமமுள
நற்குணத்துத் தாயார்
ஓவாப்புகழ் ஆமீனாத்
தாயாரை நாளும்
உவந்தேநீ அன்புடனே
வாழ்த்திடுவாய் நெஞ்சே.