உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நபியே எங்கள் நாயகமே 1984.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

2

பொல்லாமை தொலைவதற்குப்
போதெல்லாம் உழைத்தீர்
பொய்யர் தரும் தொல்லைகளைப்
பொறுமையுடன் ஏற்றீர்
கல்லாமை இல்லாமை
கட்டோடு தொலையக்
கடும்உழைப்பை மேற்கொண்டீர்
அறியாமை மிக்கோர்
சொல்லாலும் கல்லாலும்
சாடினரே உம்மை
துயரினிடை அகப்பட்டும்
தூயவழி நின்ற
நல்லவரே சாந்திமதம்
தந்தவரே யிறுதி
நபியான முஹம்மதரே
வாழியரோ வாழி.