இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை
4
எல்லையிலாக் கருணைமிகும்
இறையவனின் தூதே
எங்களின்னல் தீர்க்கவந்த
அஹ்மதுர்ர சூலே
தொல்லையிலா நல்வாழ்வு
தோற்றுவிக்க வந்த
சுடர்விளக்கே அறியாமை
தொலைவதற் குழைத்த
முல்லைநிகர் வெள்ளைமன
வேந்தேசம தர்மம்
விளைவிக்க வழிகண்ட
நல்லவரே சாந்திமதம்
வித்தகரே யார்க்கும்
தந்தவரே யிறுதி
நபியான முஹம்மதரே
வாழியரோ வாழி.