இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
13 ஊராண்டீர் மக்கள்தம் உள்ளமெலாம் ஆண்டீர் உணவினையும் பிறர்க்களித்துப் பட்டினிகி டந்தீர் சீராண்ட மனைவிவழி வந்தபொருள் கோடி திக்கற்ற பேருக்கவை கொடுத்துக்க ளித்தீர் பாராண்ட மன்னரெலாம் நின்னடிமை என்றார் பரம்பொருளுக் கெல்லோரும் அடிமையென முடித்தீர் காராண்ட உ உலகி னுக்குச் சாந்திமதம் தன்னைக் கண்டளித்த முஹம்மதரே வாழியரோ வாழி.