இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
20 செல்வந்தனை வல்லிறைவன் தந்திடுதல் அதனைச் சேர்த்துவைத்துத் தான்மட்டும் சுகிப்பதற்காய் அல்ல பல்வகையில் நொந்துகெட்ட ஏழையர்த மக்குப் பகிர்ந்தளிக்க வாகுமது மட்டுமல்ல கற்று நல்லஅறி வாளரென மானியென வறுமை நலிந்தெடுக்க வாழ்ந்திடுவார் கேட்டுப்பெற மாட்டார் செல்வமவர் தமக்காக இறையுமக்க ளித்தான் தெரிகவென்ற முஹம்மதரே வாழியரோ வாழி.