உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நபியே எங்கள் நாயகமே 1984.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22 நல்லதையே செய்வதென நிச்சயித்துக் கொள்க நாளும் அதன் படிநடக்க நல்லுறுதி செய்க பொல்லாங்கைப் பார்ப்பதில்லை மொழிவதில்லை காதால் பொல்லாங்கைக் கேட்பதில்லை கையாலும் வாழ்வில் பொல்லாங்கைத் தொடுவதில்லை எனஉறுதி கொண்டால் பொறைமிகுந்த இறையதனை நிறைவேற்றி வைப்பான் சொல்லுமிதைக் கடைப்பிடித்து நடந்திடுவீர் என்று சொன்னநபி முஹம்மதரே வாழியரோ வாழி.