உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நபியே எங்கள் நாயகமே 1984.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

25 அழகிற்காய் உடையுடுத்தல் ஆகாது படுக்கை அறையிலின்றி அலங்காரம் பெண்களுக்குத் தீது தொழிலிற்காய்த் தொழுகைதனை விட்டிடுதல் பாபம் சோம்பேறி வாழ்க்கையினர் நரகினிடை வீழ்வார் அழிவிற்கு வழிகாட்டும் எளிமையிலா வாழ்க்கை அகம்பாவக் காரரென்றும் ஈடேற மாட்டார் எழிலார்ந்த மானிடரே யிவையறிவீ ரென்றே எடுத்துரைத்த முஹம்மதரே வாழியரோ வாழி.