இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
27 மார்க்கவழி நடப்பதிலே இவன்சிறந்தோன் என்று மற்றவர்கள் புகழ்வாரென மனத்திலெண்ணிக் கொண்டு நேர்வழியில் இறைவனிடம் பற்றில்லா நெஞ்சார் நிகழ்த்துகின்ற செயலரிய தாயிருந்த போதும் ஓர்ந்திறைவன் ஓர்நாளும் அதையேற்க மாட்டான் உலகத்தார் புகழ்வதினால் பயனேது மில்லை தேர்ந்திறைவன் உவக்கவெனச் செயல்புரிக என்ற திருநபியே முஹம்மதரே வாழியரோ வாழி.