பக்கம்:நமக்கு நாமே உதவி.pdf/84

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா
82

அப்படிப் பட்ட பணத்தை எப்படி சம்பாதிப்பது என்றால், நேர்வழியில் தான், நியாயமான வழியில். நமது உழைப்புக்கேற்ற ஊதியமாக, பிறர் பொருளைக் கவராத வகையில் பணத்தை சம்பாதிக்க வேண்டும்.

நமக்கு பணம் முக்கியம்தான். ஆனால் பணமே வாழ்க்கை அல்ல. பணத்திற்காக நாம் அதன் பின்னால் அலையக் கூடாது. நமக்குப் பணம் உதவுவது போல, நாம் விடுகிற ஏவலை செய்வதுபோல, பணத்தை வைத்துக் கொள்ள வேண்டும்.

நல்ல வழியில், நியாயமான முறையில் பணம் திரட்டும் பண்பில் தான் நமது மனம் செல்ல வேண்டும், செலுத்தப்பட வேண்டும் என்பது தான் நன்மைகளைத் தரும்.

இந்த வாசகத்தை நீங்கள் என்றும் நினைவில் நிறுத்தி வைக்க வேண்டும். அதாவது ‘I Need Money, but i am not after Money’.

இறுதியில் ஒன்று, பணம் இல்லாத மனிதன் வெறும் வில்லாகத் தான் இருப்பான். அதாவது வளைந்து போய். பணம் என்ற அம்பினை நாணில் வைத்து இழுக்கும்போது தான் மனிதன் என்ற வில் எழுச்சி பெறுகிறது. வீரம் அடைகிறது. வெற்றியாகத் தனது கடமையை செய்து முடிக்கிறது. அம்பும் வேகமாக விரைந்து செல்கிறது.

அதனால் தான். (அம்பு என்ற) பணம். பாதாளம் வரைக்கும் பாயும் என்றனர். இராமரின் அம்பு ஏழு மலைகளை குடைந்து செல்லவில்லையா அப்படித்தான்