பக்கம்:நமது உடல்.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

i பன்னெடுங்காலமாக நமது உடலின் இதயத் துடிப்பும், நாடித் துடிப்பும் அறிவியல் மனப் பான்மையுள்ள மக்களின் கவனத்தைக் கவர்ந்து வந்துள்ளது. கடந்த இரண்டாயிரம் ஆண்டுகளாக உடறகூற்றியலே (ANATOMY) மக்கள் ஓரளவு கற்று வந்த போதிலும் பதினேழாவது நூற்ருண்டின் தொடக்கத்தில்தான்-கி. பி. 1618இல்-வில்லியம் ஹார்வி (wடLAM HARWEY) என்ற ஆங்கில அறிவிய லறிஞர் முதன்முதலாக நமது உடலின் இரத்த வோட்டத்தைப்பற்றிய விவரங்களே உலகிற்கு உணர்த்தினர். அதன்பிறகுதான் மக்கள் நமது உடலில் இதயம் செய்யும் பணியை நன்கு அறிந் தனர். அதற்கு முன்னர் இதயம் நன்கு பிளந்து ஆயப்பெற்றிருந்த போதிலும், அதன் பயனைப் பற்றி ஒருவரும் அறியக்கூடவில்லை. . இதுகாறும் ம னி தன் கண்டறிந்துள்ள பம்புகள் எல்லாவற்றையும்விட இதயம் மிகத் திறனுடன் இயங்கும் நுட்பமான பம்பு ஆகும். இதுதான் நமது உடலெங்கும் இரத்தத்தைக் 1. கொண்டு செல்வதற்குக் காரணமான உறுப் தி பாகும். இதயம் மார்பின் நடுவில் இடப்புறத்தில், ! அமைந்துள்ளது (படம்-49). அது கிட்டத்தட்ட கூம்பின் (coNE) வடிவத்தைக்கொண்ட தசையின ல்క్ష్సీ os : 53!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நமது_உடல்.pdf/117&oldid=773510" இலிருந்து மீள்விக்கப்பட்டது