பக்கம்:நமது உடல்.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9. மூச்சுறுப்பு மண்டலம் இதயத்துடிப்பு, இரத்தவோட்டம் ஆகிய வற்றைப் போலவே சுவாசித்தலும் உயிரைப் பாதுகாப்பதற்கு மிகவும் இன்றியமையாதது. நமது உடலிலுள்ள உயிரணுக்களுக்கு உயிரியம் (oxGEN) தேவை என்றும், அந்த உயிரியத்தை நாம் காற்றிலிருந்துதான் அடைகின்ருேம் என் றும் நாம் அறிந்துகொண்டுள்ளோம். ஒவ் வோர் உயிரணுவும் செயற்படுவதற்கு உயிரியம் தொடர்ந்து தேவைப்படுகின்றது. இந்த உயிரி யத்தைப் பெறவேண்டுமாயின், காற்றினே நமது உடலுக்குள் கொண்டு வருதல் வேண்டும். மூச்சினை உள்ளுக்கிழுத்தலால் காற்றினே நாம் பெறுகின் ருேம். மூச்சினே உள்ளுக் கிழுப்பதற்கு மூச்சுறுப்பு மண்டலம் உறுதுணையாக அமைகின்றது. மூச் சுறுப்பு மண்டலத்திலுள்ள உறுப்புகள் படத்தில் (படம்-57) காட்டப்பெற்றுள்ளன. இதில் மூக்குத் தொளைகள், முன்தொண்டை (PHARYNx), குரல்வளை * (LARYNx), மூச்சுக்குழல் (TRACHEA) மூச்சுக்கிளைக் gypso (BRANCHUS) ou #3, # #impsonssir (AlveoLí) 幻 உறுப்புகளும் அவற்றின் ι' பகுதிகளும் . அடங்கும். மூக்குத் தொளைகள் வழியாகக் காற்று நமதுடலினுள்ளே புகுகின்றது. ஏதாவது ஒரு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நமது_உடல்.pdf/135&oldid=773530" இலிருந்து மீள்விக்கப்பட்டது