பக்கம்:நமது உடல்.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

124 நமது உடல் பொறுத்தது : வயிற்றின் குறுக்கே, நுரையீரல் களுக்குக் கீழே, தட்டையாகவுள்ள தசையே உதர விதானம் ஆகும் ; இது மிகவும் ஆற்றல் வாய்க் தது. இந்தத் தசை கீழ்நோக்கி அசையும்பொழுது விலாவெலும்புகளை மேல்நோக்கியும், வெளிப் புறத்தை நோக்கியும் அசையச் செய்கின்றது. உடனே நுரையீரல்கள் விரிந்து மார்பறை முழுவ தையும் நிரப்புகின்றன. இதன் விளைவாக நுரை யீரல்களினுள் சிறிதளவு வெற்றிடம் (VACUUM) உண்டாகின்றது. இப்பொழுது நமது உடலின் வெளியேயுள்ள காற்றின் அமுக்கம் நுரையீரல் களினுள்ளிருக்கும் அமுக்கத்தைவிட அதிகமாக உள்ளது. இதல்ை காற்று மூக்கின்வழியாக நுழைந்து, தொண்டையைக் கடந்து, மூச்சுக் குழலின்வழியாக நுரையீரல்களே அடைகின்றது. இதுதான் மூச்சு வாங்குதல் என்று வழங்கப் பெறுகின்றது. மூச்சு விடுதல் என்பது பெரும் பாலும் செயலற்ற நிலையில் ஏற்படுகின்றது. மார் பறைத் தசைகளும் உதரவிதானமும் நெகிழ் கின்றன. விலாவெலும்புகள் பழைய நிலைக்கே நெருங்கிவருகின்றன , நுரையீரல்கள் சுருங்கு கின்றன; காற்று அமைதியாக வந்த வழியாகவே அகற்றப்பெறுகின்றது. இந்த இரண்டு செயல் களும் படத்தில் (படம்-58) விளக்கப்பெறுகின் றன. உற்று நோக்கித் தெளிவு பெறுங்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நமது_உடல்.pdf/137&oldid=773532" இலிருந்து மீள்விக்கப்பட்டது