உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நமது கோரிக்கை.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44 முஜிபுர் ரகுமான் மாநில சுயாட்சி என்ற அடிப்படையில் அவைகளைக் கேட்டார். அப்படிக் கேட்ட நேரத்திலேயே பாகிஸ்தானம் என்பது. ஆயிரம் மைலுக்கு அப்பால், கிழக்குப் பாகிஸ்தானும், இன்னொரு கோடியில் மேற்குப் பாகிஸ்தானும் இருக்கிறது; ஆகவே, இராணுவம் எனக்குத் தனியாக வேண்டும். கரன்சி அடிக்கிற அந்த உரிமை கூட எனக்குத் தனியாக வேண்டும் என்றெல்லாம் முஜிபுர் ரகுமான் கேட்டார். நான் - கூட திட்டவட்டமாகச் சொல்லுகிறேன் - முஜிபுர் ரகுமான் கேட் ஆறு அம்சத் திட்டத்துக்கும், நாங்கள் கேட்கிற மாநில சுயாட்சிக்கும் பெருத்த வேறுபாடு உண்டு என்று குறிப்பிட்டுக் காட்ட விரும்புகிறேன். நாம் கேட்பது சுதந்தரம் அல்ல. முஜிபுர் ரகுமான் கேட்டதே கூடச் சுதந்தரம் அல்ல. சுதந்தரத்தில் போய் முடிந்ததற்கு யார் காரணம் என்றால், முஜிபுர் ரகுமான் அல்ல; யாகியாகான்தான். அவர் மாநில சுயாட்சிதான் கேட்டார், அவர் கேட்டது கொஞ்சம் காராசாரமானது. நாம் கேட்பதை விடக் கடுமையானது. மாநில சுயாட்சியை ஆதரிப்பது இன்றைக்குத் திராவிட முன்னேற்றக் கழகம் மட்டுமல்ல; யார் யார் அதை ஆதரிக்கிறார்கள் என்பதை எல்லாம் அருமை நண்பர் திரு சுவாமினாதன் அவர்கள் எடுத்து வைத் தார்கள் இந்த மன்றத்திலே பேசும்போது. நான்கூட அதைச் சட்டசபையில் படித்துக் காட்டலாம் என்ற எண்ணத் தோடுதான் அவர்களிடமிருந்து வாங்கிச் சென்றேன். அங்கே அதைப் படித்துக் கேட்க வேண்டிய முக்கியமானவர் கள் இருந்தார்கள். திராவிட முன்னேற்றக் கழகமே கூட தன்னுடைய 1971-ஆம் ஆண்டுத் தேர்தல் அறிக்கையில் மிகத் தெளிவாகச் சொல்லியிருக்கிறது. அடுத்து 1971-ஆம் ஆண்டு கம்யூனிஸ்ட் பார்ட்டி ஆப் இண்டியா- இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தேர்தல் பிரகடனத்தில் அவர்கள் என்ன குறிப்பிட்டிருக்கிறார்கள் என்றால், இதே கருத்தைத்தான் குறிப்பிட்டிருக்கிறார்கள். இன்றைக்கு அதன் தலைவர்களில் ஒரு சிலருக்கு, மாநிலத்துக்கு அதிக அதிகாரம் என்ன, கேட்கிறார்களே, இது பிரிவினையில் கொண்டுபோய் விடுமோ” என்ற பயம் எல்லாம் ஏற்பட்டிருக்கிறது பத்திரிகையில் அவர்களுடைய அறிக்கைகளைப் படித் தேன். இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி என்றால் சிலருக்குப் புரியாமலிருக்கலாம். அதுதான் வலது கம்யூனிஸ்ட் கட்சியின் தேர்தல் அறிக்கை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நமது_கோரிக்கை.pdf/45&oldid=1705306" இலிருந்து மீள்விக்கப்பட்டது