உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நமது நிலை.pdf/3

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

83 நமது நிலை APA PUBLIC CONNEMA 10 JUN 1971 தமிழ்நாடு சட்ட மன்றப் பேரவை- மேலவை உறுப்பினர் களடங்கிய கூட்டவையில் 24- -3-1971 அன்று ஆளுநர் சந்தார் உஜ்ஜல்சிங் அவர்கள் நிகழ்த்திய பேருரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்திற்குத் தமிழக முதல்வர் கலைஞர் மு.கருணாநிதி அவர்கள்,இரு அவைகளிலும் விடையளித்தார்கள். அவருடைய உரை வருமாறு:- கவர்னர் பெருமானுடைய உரையின்மீது இந்த மாமன்றத் தில் உறுப்பினர் திரு. வேழவேந்தன் கொண்டுவந்த நன்றி அறிவிப்புத் தீர்மானத்தையொட்டி எல்லாக் கட்சிகளின் தலைவர்களும், கட்சிகளினுடைய உறுப்பினர்களும் கலந்து கொண்டு தங்களுடைய நல்ல கருத்துக்களை எடுத்துக் கூறி இருக்கிறார்கள். இறுதியாகப் பேசிய நிஜலிங்கப்பா காங்கிரஸ் கட்சித் தலைவர் திரு. பொன்னப்ப நாடார் உட்பட மொத்தம் 67 பேர் இந்த விவாதத்திலே கலந்து காண்டு உரை நிகழ்த்தியிருக்கிறார்கள். திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் 183 பேர் இங்கே இருந்தாலும் கழகத்தின் சார்பிலே உரையாற்றியவர் கள் 33 பேர். எதிர்க்கட்சியிலே மொத்தம் 52 பேர் இருந் தாலும் 34 பேர் உரையாற்றுவதற்கான வாய்ப்பினை இங்கே பெற்றிருக்கிறார்கள். இது ஒன்றே ஆளுங்கட்சி, எதிர்த்தரப்பிலே உள்ளவர்களை நல்ல வகையிலே மதிக்கிறது என்பதற்குச் சரியான சான்றாகும். கவர்னர் அவர்களுடைய உரையில் குறிப்பிட்ட, தேர் தலைப் பற்றி உறுப்பினர்கள் உரையாற்றும்போது காரசார மாக விவாதம் நடைபெற்றது. தீமையை எதிர்ப்பதில் ஒற்றுமை ஆனால், ஒவ்வொருவரும் தங்களுடைய தொகுதியில் நடைபெற்ற அசம்பாவிதங்களை எடுத்துச் சொல்லிவிட்டு இனிமேல் இதுபோன்ற அசம்பாவிதங்கள் நடக்காமல் பார்த் துக் கொள்ள வேண்டுமென்று கூறியதில் இருந்தே, இந்த வன்முறை வெறியாட்டங்களைத் தமிழகத்தைப் பொறுத்தவரையில் யாரும் விரும்பவில்லை என்பது வெகு தெளிவாகத் தெரிகிறது. 109/1-1-a

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நமது_நிலை.pdf/3&oldid=1705318" இலிருந்து மீள்விக்கப்பட்டது