உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நமது நிலை.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

83 கவர்னர்பெருமான் உரையில் புரட்சிகரம் இல்லை, சோஷ லிசம் இல்லை என்று விவாதத்தில் எடுத்துச் சொன்னார்கள்: திரு. மணலி கந்தசாமி அவர்களும், திரு. கே.டி.கே. தங்க மணி அவர்களும் நிலச் சீர்திருத்தம் பற்றிச் சொன்னார்கள். பல அன்பர்கள் புரட்சிகரமான மாறுதல் உண்டாக்கப்ப வேண்டும் என்றார்கள். நிலமில்லாதோர் இல்லை என்ற நிலை நிலம் இல்லாதவர்கள் இருக்கக் கூடாது, ஒவ்வொரு வருக்கும் 50 சென்ட் நிலமாவது இருக்க வேண்டும். 15 குழி மனைக்கட்டாவது இருந்தாகவேண்டும் என்கிற புதிய சூழ் நிலையில் திராவிட முன்னேற்றக் கழக அரசு தக்க ஏற்பாட் டைச் செய்ய என்னுடைய தலைமையில் உருவாகியிருக்கிற அந்தக் குழு'விரைவில் அந்தப் பணியை ஆராயத்தொடங்கும். அந்த பஸ் உச்சவரம்பைப் பற்றிக்கூடச் சொன்னார்கள். அடிப்படைக் கருத்தைத் திராவிட முன்னேற்றக் கழக அரசு ஏற்றுக் கொண்டிருக்கிறது. நேற்று திருமதி அனந்த நாயகி அவர்கள் பேசும்போது கூடக் குறுக்கிட்டுச் சொன் னேன். தீபஸ்ஸுக்கு உச்சவரம்பு விரைவில் வரும். ரெட் ராஸ்பெக்டிவ் எஃபக்டோடு' வரும் என்று இந்த நேரத்திலும் எடுத்துச் சொல்ல விரும்புகிறேன். வேடூவர்கள் சூழ்ந்த மான் மேலவையில் . எதிர்க் கட்சித் தலைவர் அவர்கள் மது விலக்கைத் தயவு செய்து எடுத்து விடாதீர்கள் என்று குறிப்பிட்டார்கள். மது விலக்குக் கொள்கையைப் பொறுத்த வரை தி.மு.க. வுக்கு அதில் நம்பிக்கை இல்லை என யாரும் கருதமாட்டீர் கள். எங்களை ஆளாக்கிவிட்ட பேரறிஞர் அண்ணா அவர்கள் சட்டப் பேரவையிலும் மேல் வையிலும் உரை நிகழ்த்தும் போது இந்த அரசு மது விலக்குக் கொள்கையில் தீவிரமாக இருக்கும் அறிவித்தார்கள். என்று தமிழ்நாட்டிலும், குஜராத் தி்லும் மட்டும் இப்போது மதுவிலக்கு அமுல் படுத்தப்பட்டு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நமது_நிலை.pdf/35&oldid=1705350" இலிருந்து மீள்விக்கப்பட்டது