உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நமது நிலை.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

37 , இந்த மாமன்றத்திற்கு வந்திருக்கிற உறுப்பினர்களில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் மாத்திரம் 30 வழக்கறிஞர்களும், நிஜலிங்கப்பா காங்கிரஸ் கட்சியின் சார்பில் 5 வழக்கறிஞர்களும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் 2 வழக்கறிஞர்களும், பார்வேர்ட் ப்ளாக் கட்சி யின் சார்பில் ஒரு வழக்கறிஞரும், முஸ்லீம் லீக் சார்பில் ஒரு வழக்கறிஞரும் ஆக 39 வழக்கறிஞர்கள் இந்த மாமன்றத் தின் உறுப்பினர்களாக வந்திருக்கிறார்கள். திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் டாக்டர்கள் 4 பேரும், சுதத்திரா கட்சி சார்பில் 2 பேரும் ஆக ஆறு பேர்கள் வந்திருக்கிறார்கள். அவர்கள் ஆற்றல் மிகு மிகு கருத்துரைகளை மாத்திரம் அல்ல, சமயத்தில் உதவக் கூடிய அளவிலும் ங்கே ஆறு டாக்டர்கள் இடம் பெற்றிருக்கிறார்கள். ஆசிரியர்கள் பிரதிநிதிகளாக திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் 5 பேரும் ஒருவரும் ஆக 6 பேர்கள் இடம் பெற்றிருக்கிறார்கள். பொறியாளர்களில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் ஒருவர் இடம் பெற்றிருக்கிறார். பட்டதாரிகள் சார்பில் திராவிட முன் னேற்றக் கழகத்தின் சார்பில் 20 பேரும், காங்கிரஸ் கட்சி சார்பில் 3 பேரும், ஆக 23 பேர்கள் இடம் பெற்றிருக்கிறார் கள். சுயேச்சை எதிர்க்கட்சிகள் வரிசை இந்த அளவிற்கு ஆற்றல் படைத்தவர்கள், வழக்கறிஞர் கள், மருத்துவத்துறை நண்பர்கள், பொறியாளர் இப்படிப் பட்டவர்கள் நிறைந்திருக்கிற இந்த மாமன்றத்தில் நான் முதல் அமைச்சராக இருப்பதிலும், விவாதங்களுக்குப் பதில் அளிப்பதிலும் உள்ளபடியே பெரும்பேறு பெற்றவன் என்ற முறையில் நான் பெருமைப்படுகிறேன். எதிர்கட்சி வரிசை யில் அமர்ந்திருப்பவர்களில் குறிப்பிடத்தக்கவர், காங்கிரஸ் கட்சியின் தலைவராக வீற்றிருக்கும் திரு.பொன்னப்ப நாடார் அவர்கள். அவர்கள் எதிர்க்கட்சித் தலைவராக இருந்திருக்க வேண்டுமென்று நான் பலமுறை ஆசைப்பட்டவன். அந்த ஆசை இன்றைக்கு அரைகுறையாக நிறைவேறியிருப்பதற்காக நான் உள்ளபடியே மகிழ்ச்சியடைகிறேன். நல்ல ல் ஏனென்றா வாதத்திறமையோடும், கருத்தாழத்தோடும், புள்ளி விவரங்களோடும், மெத்த மரியாதையுணர்ச்சியோடும், அரசியல் பண்போடும், தமிழர்களின் நாகரீகத்திற்கு ஏற்றவாறு அவர்கள் பேசக் கூடியவர்கள் என்ற காரணத்தி னாலும், அவர்கள் இந்த மாமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவ இருந்திருக்கக் கூடாதா என்று நான் பல நேரங்களில் எண்ணியதுண்டு. என்னுடைய அமைச்சர் பெருமக்க ளிடத்திலும் அதைப் பற்றிச்சில நேரங்களில் அங்கலாய்த்துக் கொண்டதும் உண்டு. இன்று அவர்கள் எதிர்க்கட்சித் தலைவராக வரமுடியாவிட்டாலும் இன்றைக்கு எதிர்க்கட்சிக் ராக

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நமது_நிலை.pdf/39&oldid=1705354" இலிருந்து மீள்விக்கப்பட்டது