உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நமது நிலை.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

0 48 வேளாண்மைக்கு அளித்த வசதி வசதிகள் பெருகவில்லை என்கின்ற குற்றச்சாட்டு அடிக்கடி கூறப்படுகிறது. வேளாண்மைத் துறையில் மாத்திரம் 1966-67ம் ஆண்டில் குறுகிய காலக் கடனாகக் கொடுக்கப் பட்ட தொகை ரூ.31 கோடி. 1970-71-ல் அந்தக் குறுகிய காலக் கடன் தொகை ரூ. 55 கோடியாக உயர்த்தப்பட்டி ருக்கிறது. 1966-67-ம் ஆண்டில் வேளாண்மைத் துறையில் கொடுக்கப்பட்ட நீண்டகாலக் கடன் தொகை ரூ.3 கோடி; ஆனால், 1970-71-ம் ஆண்டில் நீண்டகாலக் கடன் தொகை ரூ.19 கோடியாக உயர்த்தப்பட்டிருக்கிறது. இது வசதி பெருக்குவதற்காகச் செய்யப்பட்ட காரியம் அல்லவா என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும். வேளாண்மைக்காக மொத்தச் செலவு என்ற அடிப்படையில் பார்த்தால்கூட, 1966-67-ம் ஆண்டில் ரூ.11.80 கோடி, 1970-71-ல் ரூ. 14.74 கோடி, 1971-72-ல் ரூ. 18.39 கோடி, அதுவும் முதல் (ஃபர்ஸ்ட் பார்ட்) திட்டமாக ரூ. 18 கோடி என்ற அளவுக்கு வேளாண்மைக்கான மொத்தச் செலவு இன்றைய தினம் பெருக்கப்பட்டிருக்கிறது. களைப் . 1966-67-5. கல்விக்கான நிதி ஒதுக்கம் கல்வித் துறையை எடுத் துக்கொண்டால், 1966 67-ல் ரூ.43 கோடி ஒதுக் கப்பட்டதற்கு மாறாக, இன்றைக்கு ரூ.79 கோடி செலவழிக்கத் திட்ட மிடப்பட்டிருக்கிறது. மருத்துவத் துறையில் 1966 -67-ல் ஒதுக்கப் பட்ட ரூ. 11 கோடிக்கு மாறாக, இன்றைக்கு ரூ.20 கோடி ஒதுக்கப் பட்டிருக்கிறது. நம்மு டைய சுவாமிதாஸ் அவர் கள் பேசும்போது இந்த சதவிகிதத்தைப் பார்த் தால், கல்விக்காகச் செல் விடும் தொகையை 1971- 72-க்கு உள்ளை த 1966- 67 உடன் ஒப்பிட்டுப் . கல்விக்கு · பார்த்தால், குறைவாக உள்ளதே என்று குறிப்பிட்டார்கள்• அது சரியான வா த ம் அல்ல. சரியான புள்ளியும் அல்ல. 1966-67 வருவாய்க் கணக்கில் மொத்தத் தொகையில் ரூ.201 கோடியில், கல்விக்காக நிதி ஒதுக்கம் செய்யப்பட்டது ரூ.43.86 கோடி.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நமது_நிலை.pdf/50&oldid=1705365" இலிருந்து மீள்விக்கப்பட்டது