30
நமது முழக்கம்
குலைந்து, தன் உழைப்பை வேறு யாரோ பறித்துக்கொள்ளக் கண்டு பதறி அதனை மாற்ற முடியாததால் திகைத்துத், தலை மீது கைவைத்துக் கொண்டிருக்கும் ஏழையின் உருவமே திராவிடன், அத்தகைய உருவந்தான். ஆகவே, பூர்ஷுவா என்பதற்குப் பதில், நம் நாட்டு நிலையைக் கவனித்து, ஆரியன் என்கிறோம்; புரோலோடேரியன் என்பதற்குப் பதில், திராவிடன் என்கிறோம். வர்க்கப் போராட்டம் என்பது தான், இங்கு நாம் கூறும் ஆரிய திராவிடப் போராட்டம்!
ஏசு எமக்காகச் சிலுவையில் அறையப்பட்டு இரத்தம் சிந்தினார் என்று பேசும் கிறிஸ்தவர்கள் மனதிலே தோன்றக்கூடிய உணர்ச்சியையும், எங்கள் கடவுளாம் கோபால கிருஷ்ணர்! கோபியர்கள் நீர் விளையாடுகையில் அவர் தம் சேலைகளைக் கவர்ந்து சென்றார் குழலும் ஊதினார் என்று பேசும் திராவிடருடைய மனதிலே தோன்றக்கூடிய உணர்ச்சியையும் ஒப்பிட்டுக்காட்டி, மதம் இங்கு எவ்வளவு கேலிக் கூத்தாக்கப் பட்டிருக்கிறது பாரீர் என்று காட்டுகிறோம்.
இவை யாவும் பாட்டாளிகளின், மீட்சிக்காகவேயன்றி போட்டி மதம் ஸ்தாபிக்க அல்ல. ஆகவே மே தினத்தை மற்றவர்கள் கொண்டாடி வருவதைவிட நாம் நடத்தினால் தான், சமுதாய மத சம்பந்தமான பழம் பிடிப்புகளே சுரண்டும் பொருளாதார யந்திரத்தை அமைத்தன என்பதை, விளக்க முடியும் — விளக்க வேண்டும்.
ஜார் மன்னன் ஆட்சியிலே அவனால் இழைக்கப்பட்ட கொடுமைகளை ஒழிக்க எப்படி அந்நாட்டு மக்கள்