32
நமது முழக்கம்
காங்கிரஸ் ஆட்சியினருக்கும் காங்கிரஸ்காரர்களுக்கும் ஒன்று கூற விரும்புகிறேன். முதலாளியை நோக்கி, தொழிலாளரிடம் நியாயமாக நடவுங்கள் என்று அன்பு முறையில் காந்தியாரைவிட வேறுயாரும் உபதேசிக்க முடியாது. அவர் முகத்திலே தோன்றிய அருள் ஒளியைப் போல் எந்த காங்கிரசாரிடமும் காணமுடியாது. அப்பேர்ப்பட்டவர் தமது கடைசி காலம் வரை முதலாளிகளைக் கெஞ்சி கூத்தாடிப் பார்த்தார்; முதலாளிகளைத் தர்மவான்களென்று வாயார மனமாரப் புகழ்ந்தார். தர்மம் செய்யவே தர்மவான்கள் தோன்றுவது எனப் புகழுரை புகன்றும் கூறியும் பார்த்தார். எதற்கும் முதலாளித்துவம் சற்றாவது விட்டுக் கொடுக்கவில்லை. அவரைவிட இனி எந்த காங்கிரஸ்காரரும் அன்பு முறையில் முதலாளித்துவத்திடம் முறையிட முடியாது. முடியும் என்றால், அது ஏய்ப்பது என்று தான் பொருள்–எனவே அவர் காலத்தில் முயற்சித்துப் பார்த்து சலித்துப் போன முறையை இன்றைய ஆட்சியினர் கையாள்வது வெறும் நடிப்பென்பது மட்டுமல்ல, தொழிலாளர் உலகத்துக்குத் துரோகம் செய்வதுமாகும் என்பதை உங்களுக்கு எடுத்துக் காட்டுகிறேன்.
நம் நாட்டில் உண்மைச் சரித்திரம் நிலவ வேண்டுமானால், ஜாதி பேதம் ஒழிய வேண்டும், ஜாதிக் கோட்டையை இடித்துத் தகர்த்தால்தான் அடிப்படை இறுகிக் கெட்டியாக இருக்கும் மூடப் பழக்க வழக்கங்களை முறியடித்து அதற்கு முற்றுப் புள்ளி வைத்தால் தான் அஸ்திவாரம் பலமாக இருக்கும். அந்த வேலையைத்