உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நமது முழக்கம்.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அண்ணாதுரை

9



காங்கிரஸ் நடத்தினாலும், சோஷியலிஸ்ட் நடத்தினாலும் தொழிலாளர்களின் குறைகளைக் — கோரிக்கைகளை மக்களிடம் எடுத்துச் சொல்லி, தொழிலாளர்களின் துயரைத் துடைப்பதுதான் நமது நோக்கம்.

முதலாளிகள் தொழிலாளர்களை மோசம் செய்கிறார்கள். அவர்கள் குறைகளைக் கவனிப்பதில்லை. இந்த முதலாளிகள் யார்? இவர்கள் எப்படி முதலாளியானார்கள்?

முதலாளியாவது எப்படி?

முதலாளி எப்படி உற்பத்தியாகிறான்? எதனால் ஒருவன் முதலாளியாகிறான்? இதற்குச் சுருக்கமான பதில் ‘தனிப்பட்ட மனிதன் லாபத்தால் முதலாளியாகிறான்’. இன்னும் கொஞ்சம் விளக்கமாக மார்க்ஸ் கூறுகிறபடி பார்த்தால் ‘தொழிலாளிகளின் உழைப்பை முதலாளி திருடிக் கொள்கிறான்’. ஆகவே அவன் முதலாளியாகிறான்.

ஒருவன் ஒரு சரக்கை ஆறு ரூபாய்க்கு வாங்குகிறான். அதை எட்டு ரூபாய்க்கு விற்கிறான். ஒரு ரூபாய் நிர்வாகச் செலவு போனால் மீதமிருக்கும் ஒருரூபாய் அவனுக்குலாபம்! ஒரு பொருளை விற்றால் அவனுக்கு ஒரு ரூபாய் லாபம். ஆயிரம் பொருள்களை விற்றால் ஆயிரம் ரூபாய் லாபம். ஒரு ரூபாய் ஆயிரம் ரூபாய்களாகி, ஆயிரம் லட்சமாகி, லட்சம் கோடியாகி, கோடி கணக்கிடமுடியாத தொகையாகிவிடுகிறது. முதலாளி லாபத்தால் பெருத்து பெரிய முதலாளியாகிவிடுகிறான்.

2
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நமது_முழக்கம்.pdf/9&oldid=1770499" இலிருந்து மீள்விக்கப்பட்டது