உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நம்பிக்கை வாக்கு.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9 டார்கள்: உள்ளே இருக்கின்ற பெரும்பான்மை உறுப் பினர்களை வைத்துக் கொண்டு உங்களுக்குப் பெருத்த ஆதரவு இருக்கிறது என்று எண்ணி விட முடியாது. நாட்டிலே இருக்கின்ற மக்களில் வெளியே இருக்கிறவர்களில் 100- க்கு 90 பேர் அல்லது 10-க்கு 9 பேர் உங்களை நம்பவில்லை; உங்களை ஆதரிக்கவில்லை. என்று சொன்னார்கள். பாராளுமன்றத்திலேயும் சரி, சட்ட மன்றத்திலேயும் சரி, இருக்கின்ற உறுப்பினர்களில் பெரும்பான்மை யோரைக் கணக்கிலே எடுத்துக் கொண்டுதான். ஆட்சியின் பலத்தை நிர்ணயிப்பது வழக்கம். ஆனால் டாக்டர் ஹாண்டே அவர்கள் அதை ஏற்றுக் கொள்ள மறுக்கிறார். ஹாண்டே ஒரு டாக்டர்; ஒருவனுக்குக் காய்ச்சல் வந்தால். அவனுக்கு எத்தனை டிகிரி காய்ச்சல் அடிக்கிறது என்று பார்க்க வேண்டு மென்றால் தெர்மா மீட்டரை வைத்துப் பார்த்துத்தான் சொல்வார். அதைப்போல இந்த நாட்டிலும் மக்கள் ஆதரவு தெரிவிக்கிறார்களா இல்லையா என்பதை 1971-ஆம் ஆண்டுப் பொதுத் தேர்தலிலே திராவிட முன்னேற்றக் கழகத் திற்குப் பெரும்பான்மை வாக்கு என்னும் தெர்மாமீட்டரை வைத்துக் கணக்கெடுத்து ஆளத் தகுதி தான் என்று அனுப்பியிருக்கிறார்கள். உடையவர்கள் மீட்டர் டாக்டர் எச். வி. ஹாண்டே : உங்கள் தெர்மா பழசு. அது கெட்டுப்போய்விட்டது என்று சொன்னேன். லும் மாண்புமிகு டாக்டர் மு. கருணாநிதி : என்னுடைய தெர்மா மீட்டர் பழசா புதுசா என்பதை டாக்டர் ஹாண்டே அவர்களுக்கு ஜூரம் வரும்போது வைத்துப்பார்த் தால் தெரியும் (பலத்த ஆரவாரம்). ஆகவே, மக்கள் மன்றத் தினருடைய ஆதரவு திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு இருக்கிறதா இல்லையா என்பதை இந்த மன்றத்தினருடைய ஆதரவில் இருந்து தெரிந்து கொள்ளலாய். முன்னேற்றக் கழகத்திற்கு ஆதரவளித்துத்தான் - நம்பிக்கை இருக்கிறது என்பதற்கு அடையாளமாகத்தான்—எங்களுக்கு மக்கள் வாக்களித்தார்கள். 1967-லும் வாக்களித்தார்கள். 1971- வாக்களித்தார்கள். அதன் மூலம் மக்களின் முழு நம்பிக்கையையும் மகோன்னதமான முறையில் ளுக்குத் தெரிவித்திருக்கிறார்கள் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். மக்களுடைய அந்த ஆதரவினால் தான் நாங்கள் இங்கே வீற்றிருக்கிறோமே அல்லாமல் பதவிக் காகவோ, அதிகாரத்திற்காக கலோ. அந்தஸ்திற்காகவோ, கௌரவத்திற்காகவோ நாங்கள் இங்கே இல்லை. மக்கள் எங்களை நம்பி இங்கே அனுப்பி வைத்தார்களோ, அந்த மக்களுக்காக என்றும் உதல், உழைக்க, நாங்கள் கடமைப்பட்டவர்களாக இருக்கிறோம். அதற்காக எங்கள் கடமையை நிறைவேற்றிக்கொண்டிருக்கிறோம். 109/110-2 எங்க எந்த