உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நம்பிக்கை வாக்கு.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

13 அடுத்து, தமிழகத்திலுள்ள அரிசனக் காலனிகள் 23.098 ஆகும். 1933-ஆம் ஆண்டு முதல் 1967-ஆ ஆம் ஆண்டு வரை மொத்தமுள்ள 33 ஆயிரம் அரிசனக் காலனிகளில் மின்னொளி வழங்கப்பட்டிருந்த அரிசனக் காலனிகள் 4.354 தான். ஆனால் இந்த ஐந்தாண்டுக் காலத்தில் கழக ஆட்சியில் 18,036 அரிசனக் காலனிகள் மின்னொளி வழங்கப்பட்டிருக்கின்றன என்பதை நாம் மறந்துவிட முடியாது. மிச்சமிருப்பது ஆயிரம் தான். DR.H.V. HANDE ; These statistics do not cover the frequent and fantastic break-down of electricity all over the State, especially in the city of Madras. There is sudden loss of power, increase and decrease in voltage and it is also bad and all this happens because of expansion and so in giving statistics, that also should be covered. மாண்புமிகு டாக்டர் மு. கருணாநிதி: செய்து வருகிற பெரிய காரியத்தில் இடையில் ஏற்படுகிற குறைபாடுகள் குறித்துப் பேசுகின்றார்கள். அவை சமீபத்தில் சம்பந்தப் பட்ட அதிகாரிகளிடத்தில் சுட்டிக்காட்டப்படுகிற நேரத்தில் அந்தக் குறைபாட்டைக் களைவதற்கு மின்வாரியம் தயாராய் இருக்கிறதென்பதை நான் தெரிவித்துக் கொள்ளுகிறேன். தமிழகத்தில் பிச்சைக்காரர்களுடைய மறுவாழ்வுத் திட்டம் என்று தொடங்கியபோது அது சிலருக்குச் சாதார ணமாகத் தோன்றியிருக்கலாம். ஆனால் வேறு எந்த மாநில அரசும் அதுபற்றி எண்ணிப்பார்க்காத நேரத்தில் முன்னேற் றக் கழக அரசுதான், பிச்சைக்காரர்கள்தானே- அதுவும் தொழுநோய்ப் பிச்சைக்காரர்கள்தானே-என்று அலட்சியப் படுத்தாமல், சமுதாயத்திற்கே அவக்கேடாக இருக்கிற அந்தப் பிரச்சினையில் தன்னுடைய முழுக்கவனத்தையும் செலுத்தியிருா கிறது. இன்றைக்குப் பருகூர், பரனூர், உளுந்தூர்ப்பேட்டை புதுக்கோட்டை) ஆகிய நான்கு இடங்களில் பிச்சைக்காரர்கள் மறுவாழ்வு இல்லங்கள் அமைக்கப்பட்டு விட்டன. ஆண்டு(தஞ்சை, கோவை, சேலம், தர்மபுரி, மதுரை, நெல்லை) ஆகி கிய இடங்களில் பிச்சைக்காரர் மறுவாழ்வு இல்லங்கள் அமைக்கப்பட்டு, மொத்தமுள்ள இந்தப் பத்து இல்லங்களும் முடிந்தவுடன் 5 ஆயிரம் தொழுநோய்ப் அங்கே மறுவாழ்வு பெறுவதற்கான வாய்ப்பினை ஏற்படுத்திக் கொண்டிருப்பது இந்த முன்னேற்றக் கழக அரசுதான். இந்தத் திட்டத்தினுடைய வெற்றிக்குப் பிறகு மிச்சமுள்ள பிச்சைக்காரர்கள்- தொழுநோயால் பாதிக்கப்படாமல் இருக்கிற பிச்சைக்காரர்கள் மறுவாழ்வு பெறுகிற திட்டத் தையும் இந்த அரசு தீட்ட இருக்கிறது. இந்த பிச்சைக்காரர்கள்