உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நம்பிக்கை வாக்கு.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கள். விட 37 LDIT கலவரங்கள் குறைவாக உள்ளன. மற்ற மாநிலங்களை து நல்ல அமைதியாக இருக்கின்ற மாநிலம். முல்லி பிரச்சினை போன்ற பிரச்சினைகள் இங்கு இல்லை. அமைதியாக இருக்கக்கூடிய இடத்தில், பிரச்சினைகளே இல்லாத நிலத்தில், கிளைவ் ஹாஸ்டல் போன்ற இடங்களில் போலீஸ் காரர்கள் சென்று ஆர்ப்பாட்டம் செய்யக்கூடிய முறை தவிர்க்கப்பட வேண்டுமென்று சொன்னேனே தவிர, வேறு அல்ல. முன்கூட்டியே எச்சரிக்கை கொடுத்து, சிறிய விஷயங்கள் பெரிய கலகமாக பயங்கரமான நிலைமைகள் ஏற்படாமல் இருக்க வேண்டும். மாண்புமிகு டாக்டர் மு.கருணாநிதி : இப்படிக் கேட்பதினாலே எங்களுக்கு எந்தக் குறையும் இல்லை. தைக் கேட்டுவிட்டு ராஜினாமாச் செய்யுங்கள் என்று சொல்கிற நேரத்தில் தான் இந்தப் புள்ளி விவரங்களைக் Sn. D வேண்டியிருக்கிறது. மாணவர்கள் கிளைவ் ஹாஸ்டல் சம்பவம் நான் வரவேற்றதல்ல. பாளையங்கோட்டைச் சம்பவத்தை எவ்வளவு வன்மையாகக் கண்டித்து இருக்கிறேன். நீங்கள் யாரும் அறியாதவர்கள் அல்ல. ஒன்றை ஞாபகப்படுத்த விரும்புகிறேன். இதற்கு முன்பு நடைபெற்ற கலவரங்களின்போது, நாங்கள். டாக்டர் ஹாண்டே உள்பட ; எத்தனை தடவை கேட்டிருக் கிறோம்-- நீதி விசாரணை வேண்டுமென்று. 1965-ல் மொழிக் கிளர்ச்சி தமிழகம் பூராவிலும் நடந்த நேரத்தில், சிதம்பரம் ஒரு ஊரில் தவிர, வேறு எந்த ஊரிலும் நீதி விசாரணை வைக்கப்படவில்லை. 1958-ல் முதுகுளத்தூரில் துப்பாக்கிப் பிரயோகம் நடந்தபோது, எதிர்த் தரப்பு வரிசையில் இருந்த அத்தனைபேரும் கேட்டோம். நீதி விசாரணை வேண்டுமென்று. அன்றைக்கு முதலமைச்சராக இருந்த காமராஜரும், அமைச்சர் சுப்பிரமணியமும் அதை ஒப்புக் கொள்ளவில்லை. அதோடு எடுத்ததற்கெல்லாம் நீதி விசாரணை வைத்தால் போலீசார் கலவரம் நடந்த இடத்திற்குப் போக மாட்டார் கள். ஆகவே, நீதி விசாரணை வைக்க முடியாது என்று சொல்லி விட்டார்கள். பாளையங்கோட்டைச் சம்பவம் பற்றிக் குறிப்பிட்டபோ து ஒன்று எனக்கு ஞாபகத்திற்கு வந்தது. மேலவையில் சங்கரலிங்கம் எடுத்துச் சொன்னார்கள். பொன்னப்ப நாடார் அவர்களும், சங்கரலிங்கம் அவர்களும் சட்டமன்ற உறுப்பின ராக இருந்த போது -- 1965-ஆம் ஆண்டில்- தூத்தூர் என்ற இடத்தில் ஒரு பள்ளிக்கூடத்தில் ஒரு போலீஸ் சப்-இன்ஸ் பெக்டர் நுழைந்து தன்னை இழி மொழி கூறிய மாணவனைத். தன் வசம் ஒப்படைக்க வேண்டுமென்று கேட்ட நேரத்தில்,