உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நம்பிக்கை வாக்கு.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

47 ஹாண்டே அவர்களையும் பொன்னப்ப நாடார் அவர்களையும் விட்டு விட்டு, அந்தப் பக்கம் திரும்பினால் கொஞ்சம் மகிழ்ச்சியாக இருக்கும் என்பதற்காக அந்தப் பக்கம் போகிறேன். அ -- எதிர்மறை அ.தி.மு.க. அண்ணா தி.மு.க. என்று அவர்கள் பெயரிட்டு அழைத்தாலும், அ. தி.மு.க.வில் அண்ணா அங்கே இல்லை. அண்ணாவின் கொள்கைகள் - அண்ணாவின் கொள்கையான கடமை, கண்ணியம், கட்டுப்பாடு, அண்ணாவின் ஜன்நாயக நெறி இன்றைக்கும் திராவிட முன்னேற்றக் கழகத்திலே கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது. (பலத்த கைதட்டல்.) அ.தி.மு.க.-வில் உள்ள அந்த அ' வை முன்னால் சேர்த்தால் சரியான பொருள் வரும். 'அ' முன்னால் சேர்ந்தால் 'நீதி' 'அநீதி' ஆகும். தர்மம்' 'அதர்மம்' ஆகும். நியாயம்' 'அநியாயம்' ஆகும். அ.தி.மு.க. என்பது தி. மு. க. கொள்கைக்கு எதிரானது. (கைதட்டல்.) அதை நாம் புரிந்து கொண்டாக வேண்டும். ஆகவே அ. தி. மு.க. என்பது அண்ணாவுக்கு விரோதமாக தமிழகத்திற்கு விரோதமாக, தி. மு. கழகத்தின் கொள்கை யான மாநில சுயாட்சித் தத்துவத்திற்கு விரோதமாக இன்றையத் தினம் செயல்பட்டு வருகின்ற ஒரு புதிய கட்சி யாகும். அந்தப் புதிய கட்சி எத்தனை நாளைக்கு இருக்கும் என்றைக்கு அது இந்திரா காங்கிரசோடு இணையும், என்பதெல்லாம் வேறு விஷயம்! மிரட்டல் ஆனால், இன்றைக்குத் தமிழ் நாட்டிலே திராவிட முன்னேற்றக் கழகத்தை, அதுவும் முன்னணியிலே இருக்கிற முக்கியமானவர்களை மிரட்டி, டெல்லியில் இருக்கிற அதி காரங்களைக் காட்டிப் பணிய வைத்து விடலாமென்று நடை பெறுகின்ற முயற்சிகளை இந்த மாமன்றத்தில் இருக்கிற எதிர்க்கட்சிக்காரர்களும் நம்மோடு சேர்ந்து எதிர்ப்பார்கள் என்பதில் எனக்குக் கிஞ்சிற்றும் ஐயமில்லை. காலையில் நம்முடைய நண்பர் அரங்கண்ணல், குடிசை மாற்று வாரி யத்தின் தலைவர், மிக்க வேதனையோடு தனக்கு விளைவிக்கப் பட்ட ஒன்றை எடுத்துச் சொன்னார்கள். டெல்லியில் டெக் னிக்கல் எர்ரருக்காக 4,000, 5000 அபராதம் போட்டார்கள். அவர் அதற்கு அப்பீல் செய்து வாதாடப் போகிறார். இன் கம்டாக்ஸ் ஆபீசர் ரெய்டு நடத்துகிறார். மறுநாள் கவர்னர் என்னிடம் கேட்கிறார். 20 லட்சம் ரூபாய் அரங்கண்ணல் வீட்டிலிருந்து எடுத்து விட்டார்களாமே என்று கவர்னர் என்னிடம் கேட்கிறார். அவரைப் பார்த்து பக்தவத்சலம் கேட்கிறார் 12 லட்சம் எடுத்து விட்டார்களாமே என்று; பத்திரிகையில் செய்தி வருகிறது. அரங்கண்ணல் வீட்டில்