உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நம்பிக்கை வாக்கு.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

51 அதற்குப் பிறகு 1967 பொதுத் தேர்தலில் கழகம 173 ங்களில் போட்டியிட்டது. 138 இடங்களில் வெற்றி பெற்றது. அப்போது எம்.ஜி.ஆர். பிரச்சாரம் செய்ய வர வில்லை. அவர் மருத்துவ மனையில் இருந்தார். ஆனால் அவ ருடைய போஸ்டரைப் போட்டுப் பிரச்சாரம் செய்தார்கள் என்று சொன்னார்கள். போஸ்டர் போடப்பட்டது உண்மை. ஆனால் அதை நாங்கள் போடவில்லை. ஹாண்டே அவர்களுக் குச் சத்தியத்தின் மீது நம்பிக்கை இருந்தால்--சத்தியமாகச் சொல்கிறேன் - எம்.ஜி.ஆர். தொகுதிக்காக அவர்களே போஸ் டர் போட்டார்கள். அதில் ஒரு தொகுதிக்கு 4. 5 போஸ்டர் கள் அனுப்பி, சுவர்களில் ஒட்டி வைத்திருந்தார்கள். 1957-ல் 15 இடம். 1962-ல் 50 இடம், 1967-ல் 138 இடம் என்றால் எங்கள் வெற்றி நாவலர் அவர்களும், பேராசிரியர் அவர்களும், என்.வி.என் அவர்களும் மற்றும் உள்ள அமைச் சர் பெருமக்களும், கழகத் தலைவர்களும், கழகத்தின் செயல் வீரர்களும், கழகக் கண்மணிகளும் ஆற்றிய தொண்டுதான் என்பதை எடுத்துக் கூறக் கடமைப்பட்டவனாக நான் இருக் கிறேன். குலையவில்லை ! என்ப வைகளை எல்லாம் எதற்காக நான் குறிப்பிடுகிறேன் என்றால் -- திராவிட முன்னேற்றக் கழகம் படிப்படி யாக, மெல்ல மெல்ல, ஆனால் உறுதியாக வளர்ந்து வந்திருக் கிறது என்பதை எடுத்துக் காட்டுவதற்காகத்தான் தல்லாமல் வேறல்ல. ஹாண்டே அவர்கள் கூறியதுபோல் கழகத்தின் கட்டுக்கோப்பு அழிந்து விடவில்லை. அந்தக் கட்டுக்கோப்புக் குலையாமலேயே கழகம் இன்றும் இருக்கிறது. 18 ஆயிரம் கிளைக் கழகங்களில் 20 அல்லது 25 கிளைக்கழகங் கள் வேண்டுமானால் பிரிந்து போயிருக்கும். அவை தவிர மற்றக் கிளைக்கழகங்கள் எல்லாம் கட்டுக்கோப்புக் குலையா மல் அப்படியே இருக்கின்றன. வட்டச் செயலாளர்கள், மாவட்டச் செயலாளர்கள், வட்டப்பிரிவு, மாவட்டப்பிரிவு, மாநில அமைப்பு, பொதுக்குழு, செயற்குழு எல்லாம் கட்டுக் கோப்புக் குலையாமல் அப்படியே இருக்கின்றன. எப்படிக் காங்கிரஸ் கட்சியில் பெரும் புயல் வீசிய நேரத்திலும் தமிழ் நாட்டில் ஸ்தாபன காங்கிரஸ் கட்டுக்கோப்புக் குலையாமல் இருந்ததோ. அப்படியே எம்.ஜி.-ஆரும் ஓருசிலரும் போய் விட்டபோதிலும் கழகம் கட்டுக்கோப்புக் குலையாமல் அப் படியே இருக்கிறது. அண்மையில் என்னை பம்பாய் பத்திரிக்கைக்காரர் ஒருவர் பேட்டி கண்டார். திராவிட முன்னேற்றக் கழகத்திலிருந்து எம்.ஜி.ஆரும் இன்னும் சிலரும் பிரிந்து போய்விட்டதால் கழகத்தில் பூசல் ஏற்பட்டுக் கழகம் பலவீனம் அடைந்திருக் றதாமே என்று கேட்டார். அப்போது நான் அவருக்குக்