உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நம்பிக்கை வாக்கு.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7 - JAN1973 FADEAR நம்பிக்கை வாக்கு மாண்புமிகு டாக்டர் மு. கருணாநிதி. தலைவரவர்களே. கடந்த 7-ஆம் நாள் அன்று தொடங்கிய நம்பிக்கை கோரு கின்ற தீர்மானத்தின் மீத தான விவாதம் 24 மாண்புமிகு உறுப்பினர்களால் விவாதிக்கப்பட்டு, இன்று என்னையும் சேர்த்து 25 பேர் இந்த விவாதத்தில் கலந்து கொள்ளுகின்ற சூழ்நிலை உருவாகியிருக்கின்றது. 2-ஆம் தேதி அன்று இந்தப் பேரவை கூடியபோது, பேரவையிலே எதிர்த் தரப்பிலேயுள்ள ஒரு சில உறுப்பினர்கள். கவர்னர் பெருமான் அவர்கள் இந்த மன்றத்தினுடைய கூட்டத்தை புரோரோக் செய்து, மீண்டும் ஒரு தேதியை அறிவித்திருப்பது, உயர்நீதி மன்றத்தில் விவா த்திலிருக்கிற நேரத்தில் இந்தப் பேரவை கூடலாமா, இந்தப் பேரவையிலே நடைபெறுகிற நிகழ்ச்சிகளெல்லாம் நீதிமன்றத் தினுடைய தீர்ப்பு, முன்னாள் சபாநாயகர் திரு மதியழகன் அவர்கள் தொடர்ந்த வழக்கின் அடிப்படையில் அவருக்குச் சாதகமாக முடிந்து விடுமானால், நடவடிக்கைகள் அனைத் தையும் ரத்துச் செய்துவிட வேண்டிய நிலைமை ஏற்படுமே. ஏன் வீண் காலதாமதம். கால விரயம், பண விரயம் ஏற்படுகின்ற அளவுக்கு இந்தப் பேரவையை நடத்த வேண் டும்? என்கின்ற வினாக்களையெல்லாம் எழுப்பினார்கள். இன்றையத்தினம் அந்த வினாக்களுக்கெல்லாம் உற்ற விடை