பக்கம்:நம் நேரு.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

20

நம் நேரு


வன் துயரத்தில் சிக்கியபோதும், உற்சாகம் இழக்கும் வேளைகளிலும் அவருடைய துணையை நாடி ஓடுவது வழக்கமாம். நரை ஓடிய அழகிய தாடியும், வயது முதிர்ச்சியும் பெற்றிருந்த அவரது முகம் நேருவின் இளம் கண்களுக்கு அற்புதச் சித்திரமாக விளங்கியதாம். கணக்கற்ற கதைகளை உள்ளடக்கிய காலத் திருஉருவம் என்றே அப் பெரியாரை அவர் மதித்திருந்தார். அராபிய இரவுக் கதைகளையும், 1857-1858-ம் வருஷ அனுபவங்களையும், வேறு பல வகைக் கதைகளையும் முபாரக் அலி சுவையாகச் சொல்லுவது வழக்கமாம். நேரு வளர்ந்து பெரியவராகிப் பல வருஷங்கள் சென்ற பின்னர்தான் அந்தப் பெரியார் காலமானார் என்று தெரிகிறது. அவர் ஜவஹர்லால் நேருவின் நினைவிலே நிலையான இடம் பெற்றுவிட்ட உத்தமர் ஆவர்.

சிறு வயதில் ராமாயண, மகாபாரதக் கதைகளைக் கேட்டு உற்சாகமும் உணர்வும் பெறும் பாக்கியமற்ற இந்தியக் குழந்தைகள் யாராவது இருக்க முடியுமா என்ன? ஜவஹருக்கு அவருடைய தாயும் உறவினரும் அக் கதைகளையும், மற்றும் பலவிதப் புராணக் கதைகளையும், நாடோடிக் கதைகளையும் நிறைய நிறையச் சொல்லி மகிழ்வித்தனர். இந்த ரகமான கதைகளைக் கேட்டு ரசித்து மகிழ்ந்தார் நேரு. ஆயினும் சிறுவயது முதலே மதம், பக்தி, பூஜை எல்லாம் பெண்களுக்குத் தேவையான காரியங்கள் என்ற எண்ணம்தான் அவர் உள்ளத்தில் வளர்ந்து வந்தது.

மோதிலால் நேருவும், அவர் குடும்பத்தைச் சேர்ந்த ஆண்களும் ‘மத அனுஷ்டானங்கள், பூஜை புனஸ்காரங்களை எல்லாம் வேடிக்கையாகவும் விளையாட்டாக-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நம்_நேரு.pdf/23&oldid=1364012" இலிருந்து மீள்விக்கப்பட்டது