பக்கம்:நம் நேரு.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வாழ்க்கை வரலாறு

73


விடுவதும் சாத்தியமாயிற்று. குறுகிய காலத்தில் அப்படி அழியாப் புகழைப் பெற்ற ஒரு சிலரில் பகத்சிங் மிக முக்கியமானவர்.

லஜபதிராயின் மரணத்துக்குப் பின்னர், சைமன் கமிஷனை எதிர்க்கும் போராட்டம் வலுப்பெற்றது. ஊர்வலங்களும், கொடி காட்டுதலும் கோஷமிடுதலும் அதிகரித்தன. அரசாங்கம் குதிரைப் படையை ஏவி மனிதக் கூட்டத்தை மிதித்துத் துவைக்க உத்திரவிட்டது. தடிகளைத் தாறுமாறாகப் பிரயோகிக்க அனுமதி அளித்தது. ல௲மணபுரியில் சைமனை எதிர்த்து ஊர்வலம் வந்த போது, ஜவஹர்லால் நேருவும் வேறு சில தலைவர்களும் பலமாகத் தாக்கப்பட்டார்கள். நேரு தனது அரசியல் வாழ்வில் பெற்ற முதல் தடியடி அனுபவம் அதுதான்.


அத்தியாயம் 9.


1929-ம் வருஷம் லாகூரில் நடைபெற்ற காங்கிரசுக்கு நேரு தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். எதிர்பாராமல் வந்து சேர்ந்த பொறுப்பு அது.

அவ் வருஷம் காந்திஜீயைத் தலைவராகத் தேர்க்தெடுக்க அனைவரும் முடிவு செய்துவிட்டனர். காந்திஜீ பல வருஷங்களாக அரசியலில் நேரடியாகப் பங்கு பெறாமல் விலகியே வாழ்ந்தார். கதர் இயக்கம் சம்பந்தமாக இந்தியாவின் பரப்பு முழுவதையும் தமது யாத்திரையினால் அளந்தார். ‘சரித்திர நாராயணர்களுக்குத் தொண்டு' புரிவதே தனது லட்சியம் என்று கதர்ப் பிரச்சாரம் செய்து, நிதி வசூலித்துச் சுற்றிக் கொண்டிருந்த காந்திஜீ

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நம்_நேரு.pdf/76&oldid=1377002" இலிருந்து மீள்விக்கப்பட்டது