பக்கம்:நற்றமிழில் நால் வேதம்.pdf/178

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

子・

y

t

உள்மனத்தின் எழுச்சி ஆர்வம்

இறைவனின் கோவில்தான் மனித உடல். உள்ளே உறைந்திருக்கும் புரிதலாகிய திரியைத் தூண்டி விடுபவன். உண்மையாகிற ஒளியைப் பெறுகிறான். மனத்தை ஒருமுகப் படுத்துவதன் மூலம் உள்ளொளி மலர்ச்சி அடைகிறது. மனத்தை தூய்மையாக வைத்துக் கொள்ளாதவர்களுக்கு வாழ்க்கையில் மகிழ்ச்சி கிடைப்பதில்லை. காலமெல்லாம் மனத்தை விழிப்புடன் வைத்திருப்பவனுக்கு வாழ்க்கையின் மறைபுதிர்கள் புரிய வைக்கப்படுகின்றன. உனது உள்ளக் கோவிலில் குடிகொண்டிருக்கும் புனிதச் செந்தீச் சுடர் என்றும் பேரொளியாகச் சுடர் விடட்டும்.

(இருக் 8)

  • ... நற்றமிழில் நால் வேதம்