பக்கம்:நற்றமிழில் நால் வேதம்.pdf/196

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

184

உழைப்பைப் போற்றும் புகழ்ப் பாடல்கள்

உலக மக்களே ஒற்றுமையுடன் வாழுங்கள். கட்டுப்பாட்டைக் காத்து ஒருவருக்கொருவர் ஒத்துழைப்பைத் தாருங்கள்.

ஒரே குரல் எழுப்புங்கள், ஒரு மனமாகத் தீர்மானங்களை நிறுைவேற்றுங்கள். நமது முன்னோர்களாகிய முனிவர்கள், தலைவர்கள், ஆசான்கள், நேர்மையான முறையில் தங்கள் தங்கள் கடமைகளைச் செய்தார்கள். அது போன்றே நீங்களும் செயல்படுங்கள், நீங்கள் தவறிழைக்க மாட்டீர்கள். (இருக் 10)