பக்கம்:நற்றமிழில் நால் வேதம்.pdf/250

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

238

ஓர் உண்மையான அன்பனின் பேச்சில்

y

மென்மை இருக்கிறது. பிறர் உணர்வுகளை மதிக்கிற தன்மை அவனிடமுண்டு. (சாம 251)

தொடக்கம், நடு, முடிவு, ஆகிய வாழ்வின் எந்த நிலையிலும்

முரட்டுச் சீற்றத்தின் தீய விளைவுகளிலிருந்து ஒதுங்கி இரு. (சாம 358)

இறைவா, தெய்வீக நறுமணத்தை எங்கள் மேல் தவழவிடு. எங்கள் பேச்சை தூய்மைப்படுத்திடு என்றும் எங்களை இனிமையாகப் பேசவிடு. (சாம)

அறக்கொடை செய்யும்போது,

நான் பிசிறனாக இல்லாமலிருக்க வேண்டும்.

தாராளச் சிந்தனை என் உள்ளத்தில் துளிர்த்தெழட்டும். (இருக் 2)

எவரெவர் கடுமையாக உழைக்கிறார்களோ, நல்ல பணிக்காக உழைக்கிறார்களோ, அவர்களுக்கே இறைவன் பாதுகாப்பளிக்கிறான், உதவி செய்கிறான். (இருக் 4)

நற்றமிழில் நால் வேதம்