பக்கம்:நற்றிணை-2.pdf/320

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

316 - நற்றிணை தெளிவுரை தெளிவுரை : நெஞ்சமே இலேவடிவாகிய மாட்சியமைந்த அம்பினை வில்லிடத்தே மாண்புபட இருத்தியவர், உயிர் களிடத்தே அன்பற்ற ஆறலைப்போரான ஆடவர்கள். அவர்கள் கொன்றும் புண்படச்செய்தும் வருத்துதலாலே, வழக்கமாகப் போய்வருவார் பலரோடு புதியவரும் பட்டு வீழ்ந்துகிடந்த, அச்சம் வருதலையுடைய கவர்த்த நெறி அது. அதனிடத்தே, அழலைப் போலச் சிவந்த காதுகளையுடைய கழுகின் சேவல் பிணங்களைத் தின்னதபடி, அதனை அலைக்கழிக்கும் கிழநரி யானது, அங்கே தோன்றும் தன் நிழலைப் பார்த்து மகிழ்ந்து விளையாடும். அதன்பின், பச்சை ஊனை நிறையத் தின்று, நீர் வேட்கையுற்றதாய்ப், பேய்த்தேர் தோன்றும் வறண்ட பாலை யிலே, அங்குமிங்குமாக நீர் பருகுதற்கு விரும்பித் தேடியபடி அலையும். அலைந்து வருந்தியபின், பிணத்தை முடியுள்ள கற் குவியலின் நீழலிலே தான் ஒதுங்கிக் கிடந்து களைப்பாறு தற்கும் இடம்பெழுது வருந்தியிருக்கும். அத்தகைய கடத்தற் கரிய சுரத்தின் கவர்த்த நெறியானது வருதலினலே, வழி நடந்து வருந்தியுள்ள நமக்கும் கடத்தற்கு அரியவாயின். இவ்விடத்தே, மூங்கில் போலும் தோள்களையுடைய மாட்சி யமைந்த இளமடந்தையான நம் காதலியும், தன் மாளிகையை விட்டு வெளிப்போந்து எவ்வாறு வந்துசேர்ந்தாளோ? அவள் இரங்கத்தக்கவள்.காண்! - கருத்து : "அவள் நினைவே தொடர்ந்து நெஞ்சில் நிறை கின்றது' என்பதாம். . சொற்பொருள் : இலை மாண் பகழி - இலை வடிவாக முனை அமைந்துள்ள மாண்பமைந்த அம்பு மாண்பாவது கூர்மையும் முன்னர்ப் பல உயிரைக் குடித்துள்ள தகுதியும். வேறு வடிவு களினின்றும் வேறுபடுத்த இலைமாண் அம்பு என்றனர்; பிற் பிறைவாய் அம்பு முதலியன.- மாண் இரீய - ம்ாண்புடன் இருத்திய மாண்பு என்பது இங்கே தன் குறி தப்பாது என்னும் திடமான மனவுறுதி. அன்புஇல் ஆடவ்ர் . ஆறல்ை கள்வர். பிறரைக் கொன்று வழிபறிக்கும் இயல்பின்ர் ஆதலால், அன்பில் ஆடவர் என்றனர். வம்பலர் புதியவர். பல்ருடன் என்றது, முன்பே அவ்வழி வந்து உயிரிழந்தவர் பலரையும். வம்பலர் - அன்று பட்டு வீழ்ந்தவர். சேவல் - கழுகுச் சேவல்; எருவைச் சேவலும் ஆம், வெய்துற்று - நீர் வேட்கையாலே வருத்தமுற்று முதுநரி கிழநரி, முதுநரியாயிருந்தும் அறிவற்று மயங்கித் திரிந்தது என்க. தேர் - பேய்த் தேர்; கானில் நீர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை-2.pdf/320&oldid=774400" இலிருந்து மீள்விக்கப்பட்டது