பக்கம்:நற்றிணை-2.pdf/458

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

454 நற்றிணை தெளிவுரை வடமவண்ணக்கண் பேரிசாத்தனர் 299, 323, 378 இவர் சாத்தனர் என்னும் பெயரினர். வண்ணக்கண்' நாணய நோட்டக்காரர் பணி; வடம் என்னும் அடையால் வடபகுதிக்குரிய பணிபுரிந்தவராகலாம். இஃதேபோல், வடம வண்ண்க்கண் தாமோதரனர் என்பாரும் குறுந்தொகைப் புலவருள் ஒருவராகக் காணப்படுகின்றனர். கடலலையின் ஒலியினை நற்றிணையின்_378ஆவது செய்யுளுள் பேரிகையின் ஒலிக்கு உவமித்ததால் பேரி என்னும் அடைமொழியினை இவர் பெற்றனர் எனக் கருதுவர். பாண்டியன் இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நன்மாறனைப் பாடியவராதலால் பாண்டி நாட்ட்ாராகலாம். பெரிய சாத்தினை வைத்து வாணிபம் நடாத்தியவர் என்றும் சிலர் நினைப்பர். நீயும், நின் புதல் வரும், அவர் பெறும் பெரும் புதல்வரும் நீடு வாழ்க’ என வாழ்த்து மரபை வகுத்தவர் இவர். கடல் அலை கரையில் மோதிச் சிதறுவதை வில் எறி பஞ்சிபோல, மல்கு திரை வளிபொரு வயங்கு பிசிர் பொங்கும் என்றவர் இவர்-299; இவருடைய 318ஆவது நெய்தற் செய்யுள் பிரிவாற்ருமையாற் புலம்பும் தலைவியின் உள்ளத்தை-அதன் வெம்மைத் துயரை நன்கு ஓவியப்படுத்திக் காட்டுவதாகும். நாடாது இயைந்த நட்பு எவ்வளவு வருத்தம் தருவதாயிற்று என்று காட்டுவர் இவர். - வண்ணக்கண் சோருமருங் குமரஞர் 257 வண்ணக்கண் நாணய கோட்டக்காரர் பணி என்பர். இப் பெயரால் தமிழகத்துப் பல ஊர்கள் முற்காலத்தும் பிற்காலத் தும் நிலவின. எனவே, ஊரைக் குறிக்கும் என்பதும் பொருந்து வதே. சோருமருங் குமரனர் என்பதை 'சேரிக்குமரங் குமரனர்" எனக் கொள்வர் ஒளவை. இயங்குநர் மடிந்த, கயம்திகழ் சிறு நெறிக், கடுமா வழங்குதல் அறிந்தும் நடுநாள் வருதி, நோகோ யானே' என இரவுக்குறி ஏதம் காட்டி மறுத்தலே இவர் கூறுவர். வன்பரணர் 374 / பரணரினும் வேருனவர் என்று காட்ட வன்பரணர் என்று குறித்திருக்கின்றனர். கொல்லித் தலைவனை வல்வில் ஒரியின் வன்மையை வியந்து பாடியவர். களரிப் புளியால் காய்பசி பெயர்க்கும் மக்களை இவர் செய்யுளிற் காணலாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை-2.pdf/458&oldid=774704" இலிருந்து மீள்விக்கப்பட்டது