பக்கம்:நற்றிணை-2.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

IᎳ களையும் தருவதற்கு எண்ணினேன். அதன் விளைவு, நூலின் அளவு விரிவடைந்துபோய், விலையையும் அதற்கேற்ப அமைக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. தமிழ் நலம் கருதும் அன்பர்கள் இதனைப் பெரிதும் பாராட்டாமல் தமிழின் சீரினை ஒலிக்கும் திறத்தையே உவப்புடன் போற்றி இன்புறுவார்கள், வரவேற் பார்கள் என்று நம்புகின்றேன். பாடியோர் பாடப்பெற்ருேர்பற்றிய குறிப்புக்களையும், விடுபட்ட 234ஆம் பாடலையும் பின்னிணைப்புக்களாகச் சேர்த்துள்ளேன். எட்டுத் தொகை நூல்களைப் பற்றி வரிசைப்படுத்திக் காட்டும் பழம் பாடல் ஒன்று, நற்றிணை நல்ல குறுந்தொகை ஐங்குறுநூறு ஒத்த பதிற்றுப்பத்து ஓங்கு பரிபாடல் கற்றறிந்தார் ஏத்தும் கலியே அகம்புறம் என்று இத்திறத்த எட்டுத் தொகை. - என்று நூற்களை எடுத்துக் காட்டும்போது, இந் நற்றிணை நூற்பெயரையே முதலாவதாகக் கொண்டு, இதன் சிறப்பைப் போற்றுகின்றது. திணை-என்ருல் ஒழுக்கம் என்று பொருள்; 'நல் திணை' என்றும் நல்லொழுக்கம்' என்று ஆகும். ஆகவே, தொகை நூல்களை அமைத்த காலத்தில், திணையொழுக்கங் களில் நல்ல மரபும் பண்பும் அமைந்த செய்யுட்களைத் தேர்ந்து இந் நற்றிணைத் தொகுதியாக்கினர் என்று கருதலாம். இந்தக் கருத்துக்கு அரண் செய்வனவாகவே இந்நூற் செய்யுட்கள் செறிவோடு அமைந்து, சிறந்த உயிரோவியக் காட்சிகளை நம் உள்ளத்தில் உருவாக்கும் செவ்விபெற்றுத் திகழ்கின்றன. நற்றிணை நானுாறு என்று அழைக்கப்பெறும் இத் தொகுப் பினை அமைப்பதற்கான ஊக்கமும் ஆக்கமும் தந்து உதவிய சிறப்பினன், பன்டுை தந்த பாண்டியன் மாறன் வழுதி என்னும் பாண்டியப் பேரரசன் ஆவான். தொகுப்பித்தான் பெயரை அறிய முடிகிறது; ஆனல் தொகுத்த தமிழ்ச் சான்ருேர் பெயர் யாதென எந்தக் குறிப்பும் நமக்குக் கிடைக்கவில்லை. கடவுள் வாழ்த்துப் பாடியவர் பாரதம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை-2.pdf/6&oldid=774748" இலிருந்து மீள்விக்கப்பட்டது