உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நற்றிணை நாடகங்கள்.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவத்தைக் கட்டிக்கொள்கிறாள் !

மூழ்கிய உலகம் தனக்கென வாழாப் பிறர்க்குரியாளாம் உன்னிடமும் தன்னலமே காண்கிறது.

தலைவி: என்ன சொல்கிறது?

தோழி: அகமுடையான் அருகே இருக்கவேண்டும் என அழுகிறாயாம்!

தலைவி: அவர்கள் இன்பத்தின் நுட்பம் அறியார். இன்பம், உண்பதும் உறங்குவதுமா? அருகில் இருந்தால்மட்டும் இன்பமோ? செயலில் ஈடுபட்டு, உலகினை மறந்து, உழைத்து உதவுவதில் பிறக்கும் ஆறுதலான நிறைமனமே இன்பம் - பிறர் வாழத் தான் வாழும் வாழ்வே வாழ்வு. காதல் வாழ்வு அதனாலேயே சிறந்தது. வேளாண்மை வாழ்வு இல்லை என்பதே வாட்டம். அதனை மறந்தாரே என்பதே துன்பம். பலபல இன்பவுலகக்கனவு காணும் மனம் உடைகிறது. அதற்கும் மேலாக இந்த ஏழை இளம் பெண்ணையும் இவ்வாறு பாவத்திற்கு உள்ளாக்குகிறோமே என்று மனம் நைகிறது. கூட்டுறவில் தழைக்கிறது அறவுலகம். தனி வாழ்வில் காய்கிறது பழியுலகம். அதனைப் படைக்கப் பிறந்து இதனைப் படைக்கிறோமோ என்ற துன்பத்தினும் பெருந்துன்பம் எது?

இப்பாலை பாடிய பெருங்கடுங்கோ என்ற சங்கப் புலவர் 11 வரியில் இந்த நாடகம் எழுதுகிறார்:

அடைகரை மாஅத்து அல்குசினை ஒலியத்
தளிர்கவின் எய்திய தண்நறும் பொதும்பில்
சேவலொடு கெழீஇய செங்கண் இருங்குயில்
புகன்றுஎதிர் ஆலும் பூமலி காலையும்

95