உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நற்றிணை நாடகங்கள்.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

7. அவளே மருந்து



அவன்: என்ன! இவ்வளவு இருட்டில் புறப்பட்டு விட்டீர்கள்? வெள்ளி முளைத்ததும் வெளியேறவேண்டுமா! எங்குப் பயணம்?

தோழி: இரவெல்லாமா இங்கு அலைகிறீர்? உங்களுக்கு இரவும் பகலும் ஒன்றுதானோ? எங்களை வழிமடக்கி வம்பளப்பதுதான் நீங்கள் வாழக் கற்ற வழிபோலும்!

அவன்: மனம் உருகும் என்பார்கள்; அது குளிரில் உறைந்துவிடுகிறதா! மனமிரங்காதா உங்களுக்கு?வன்மனமாய்விட்டதா பெண்மனம்? காதல்...

தோழி: காசா, பணமா, கைப்பிடி சோறா, காதல்

என்பது கேட்டதும் எடுத்து வழங்க? கண்டவர்க்கு எல்லாம் வழங்கவா, மனம் இரங்கவேண்டும்? ஒத்த இருவர் ஒருமைப்பாடன்றோ காதல்?

97

7