உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நற்றிணை நாடகங்கள்.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அவளே மருந்து

மகிழ்கிறது! நோன்பு முடிந்ததும், முழங்கை வழியே நெய் வழிய உண்பது கன்றுதான்! சிறுவீடு மேய்வது கறவைக்கும் கன்றுக்கும் களிக்கூத்து!

தோழி: கருங்கூத்து என்கிறீர்களா? சிவ சிவா! நோன்பு என்றால் நோவாது நுங்குவதா? உங்கள் நா என்ன நல்ல பாம்பா இவ்வாறு நஞ்சினைக் கக்க? உருப்போடும் மந்திரம் அன்பு! உடைப்பது எம் நெஞ்சு!

அவன்: கல்லா உடைய? (முகத்தை நெரிக்கிறான்.) தவறு தவறு! காண்கின்றேன் உண்மையை! கன்றுக்காகத்தான் வாழ்கின்றீர்கள். கன்றின் அன்பும் கறவை அன்பு மன்றோ பாலாய்ப் பொழியும்? ஊரென்றால் உங்கள் ஊரே ; அன்புடையர், உங்கள் அருளால், உங்கள் காவலில் ஒன்றாகுவர்; ஊர் எல்லாம் இன்பம் பொங்கும்.

தோழி: இவ்வளவு உருக்கமாகப் பேசவேண்டுமா. இந்த ஏச்சுரையை?

அவன்: ஏச்சா? இஃது என் மூச்சு; உயிர்ப் பேச்சு. முன்னே வற்புறுத்திப் பிரிப்பதெல்லாம் பின்னே பிரித்துக் கூட்டவே. ஊடல் இருந்தாலன்றோ கூடல் சிறக்கும்? அதுதான் நோன்பு. நானும் நோற்கிறேன்.

தோழி: எங்களைச் சிறு பிள்ளைகள் என்றீரே! அந்தமட்டும் மாடு மேய்க்கும் சிறுபிள்ளைகள் என்றீர்! நீங்களுமா சிறுபிள்ளை, நோன்பு நோற்க!

அவன்: கள்ளமில்லாச் சிறுபிள்ளைதான் கடவுளின்

வடிவம்! சிறுவீடு மேய்தல், உங்கள் நிலையை மின்னல் வெட்டின் வெளிச்சம் போலத் திடீர் என விளக்கியது.

99