உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நற்றிணை நாடகங்கள்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

2. நப்புன்னை



1

நப்புன்னைமரத்தின் நிழலில் நப்பின்னை வளர்ந்தோங்குகின்றாள். நப்பின்னை இளமங்கையாக அழகு திரண்டு ஒளிர்கின்றாள். காதல் பூத்தொளிர்கின்றது; இவள் மனத்தினைக் கொள்ளைகொள்ளும் கண்ணன் வருகின்றான்;

காண்கின்றான்; காதல் கொள்கின்றான். இருவரும் ஒருயிரும் ஈருடலுமாகப் பிணைகின்றனர். திருமணம் செய்வதற்கு ஏற்பாடு செய்யாமல். கண்ணன் நாடோறும் நப்பின்னையை வந்து கண்டுபோவதிலேயே காலத்தினைக் கழிக்கின்றான். "பிறரறிந்தால் என் செய்வது ?" என்பது நப்பின்னையின் கவலை; அவள் தோழி நக்கண்ணையின் வாட்டம். கவலை ஒருபுறம்! காதல் ஒரு புறம்!

14