உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நற்றிணை நாடகங்கள்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நப்புன்னை

எங்கும் கேட்டதில்லை. குழந்தைகள்போலத் தான் வளர்த்தவற்றை வருத்தத்தோடும் பிரிந்து தன் கணவனில்லம் சென்றாள் சகுந்தலை. பிரியவே முடியாது எனக் கணவனையே தன் இல்லத்திற்கு முழுமனத்தோடும் வரச்செய்த கதையினை, உலகில், நம் தமிழ் நாட்டில் அன்றிக் கேட்டவர் யார்? ஆனால், தமிழ் மங்கையின் அன்பு இதனோடு முடியவில்லை' என்று முடிக்கிறான் சாத்தன்.

4

"நப்புன்னையின் சிறப்பினை வள்ளியம்மையார் கூறக்கேட்டதிலிருந்து குழந்தைகளுக்கு அந்த பேரன்பு — பேருருக்கம்; பெரிய மதிப்பு! அங்குத்தான் அவர்கள் சென்று விளையாடுகின்றார்கள். எல்லோருக்கும், புன்னை, நிழல் கொடுப்பதுபோல, எல்லோருக்கும் உதவவேண்டும் என்பது அவர்கள் மனத்தில் படிகிறது. பூவினையும் கொம்பினையும் பறித்தாலும் புன்னை பொறுத்திருப்பதுபோலத் தாங்களும் பொறுமை பாராட்டவேண்டும் என்பதனையும் அவர்கள் உணர்கிறார்கள். அவர்களும் நப்புன்னை அக்காளின் புகழைப் பாராட்டாத நாளே கிடையாது " என்று முடிக்கிறாள் பாட்டி.

கேட்டதும் தன்னை மறக்கிறான் கண்ணன்; விழித்துப் பார்க்கிறான்.

"மரத்திற்கும் உயிர் இருக்கிறது என்பார்கள்; ஆனால், மரங்களையும் உடன் பிறந்தாராக, 'வாயில் மட்டுமன்றி வாழ்க்கையிலும்' கொண்டு பாராட்டும் இந்தத் தமிழ்ப்புதுமை — தலைமுறை தலைமுறையாக உங்களிடம் வளர்ந்துவருகிற நுட்பம் — இன்றுதான் விளங்குகிறது. உலகம் முழுதினையும் — மரங்கொடியுட்பட — உடன் பிறந்ததாகக்-

29