உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நற்றிணை நாடகங்கள்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

எல்லாம் அவளுக்கே

உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு வைத்திருப்பவள்போல வருகிறாள் : தன்னால் செய்ய முடியாததனைச் செய்து முடித்ததுபோல அவள் பெரு மூச்சு விடுகிறாள்; இல்லை! பெரு மூச்சு விட்டாற்போலத் தோன்றுகிறாள். அவளால் இதற்குமேல் ஒன்றும் செய்ய முடியாது என்பது தெளிவாகிறது.

அவள் கண் தோழிமேல் விழுகிறது. அவ்வுயிர்த்தோழியே இனிச் செய்யவேண்டுவனவற்றைச் செய்ய வேண்டுமோ?

3

பின் அவள் என் செய்வாள்? இளையவள்; குறுமகள்—பச்சிளங் குழந்தையின் கள்ளமற்ற உள்ளமே அன்று அவள் வடிவம். செயற்கரியது செய்து முடித்தவர் மேலும் செய்வது எப்படி? மனிதப் பிறப்பால் ஆவதோ?

பெரு வெற்றி! மிக்க பெரு வெற்றி! வெற்றியின்பின் பெரு வீரர்கள் என்ன செய்கின்றனர்?' அப்பாடா!, என்று பெருமூச்சு விட்டு ஓய்வு எடுத்துக்கொள்கின்றனர்; வென்ற நாட்டில், அமைதியை நாட்டி ஆட்சிக்கு வகை செய்வது அமைச்சர் கடன் என அமைச்சரை நோக்கி நிற்கின்றனர்; தம் சுமையைக் கீழிறக்கிவிட்டு அந்தச் சுமையை அவர்கள்மேல் ஏற்றிவிடுகின்றனர். அப்படி உய்த்து விடுவது—தள்ளி விடுவது—அதுதானே உலகம்! அதுதானே அரசியல்!

அவள் அறிவாள் அரசநிலை. மலை நாட்டரசன் மகள் அல்லளோ அவள்?

33

3