உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நற்றிணை நாடகங்கள்.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

புது மணப் பெண்

3

"மாம். நெடுந்தொலைவு சென்று வருந்தத்தான் செய்வர்; இங்கும் வருந்துவர்; அங்கும் வருந்துவர்; நீ சொல்லும் நடை வருத்தம் அன்று" என்கிறாள் தோழி.

"பின் என்ன வருத்தம்? ஐயோ ! இன்னும் என்ன அச்சுறுத்தப் போகிறாய்?"

"அச்சம் அன்று; ஆறுதல். யானையின் வருத்தம் சொன்னபோதே நடை வருத்தம் கூறி முடியவில்லையா? மேலும் வருந்துவர் என்றால் வேறொன்று உண்டு. இந்தக் காட்சி அவருக்கு எதனை நினைப்பூட்டும்? அவர் மனமும் உன் மனமும் ஒன்றாயிற்றே! அவர் கண்ணால் இதைப் பார். உன் பெருமையாம் வருத்தமன்றோ தோன்றும்?"

"என்ன, என் தலையிலெல்லாவற்றையும் தூக்கிவாரிப் போடுகிறாய்? என்ன காட்சி? ஆம், விளங்குகிறது. உலகம் ஒரு பாலைவனம். அன்பு என்ற நீரும் இல்லை: பிரிவு என்ற நிழலும் இல்லை. பயனற்ற களர்நிலம் போன்ற மனம் படைத்த மக்களே வெம்பி வெம்பி மனம் இறுகிப் பிளவுபட்டுக் கிடக்கின்றனர். யானை போன்ற பேராற்றல் படைத்தவர்கள், அருள் உள்ளத்தால், கலைஞராய் வாழ உலகிற்கு உழைக்கின்றனர்; கொடுமை வெயிலில் புழுங்கி, மெலிந்து, களர் மனத்தைத் திருத்தப் பார்க்கின்றனர். வறண்ட உள்ளம் குப்பையும் கூளமுமாய்ப் புழுதியாகிறது. அந்த உணர்ச்சிப் புழுதியில் இவர்களும் முழுகி மாசுபட்டவர் போல மாறிநின்று வாடவேண்டுவதுதான்! இவர்கள் வருத்தம் தீரத் துணை ஏது? அன்பு ஏது? எங்குப் பார்த்தாலும் வறண்ட பாலைவனம்.

.

53