உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நற்றிணை நாடகங்கள்.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தினசரியா பாட்டு?

பொருள் விளங்கி இனித்துமிருக்கும். அவை அவர்கள் உணர்ச்சியையும் தூண்டியிருக்கும். அவ் வகையால் அவை அந்நாளுக்கு உகந்தனவாய் இருந்தாலும், இந்நாளுக்கு உகந்ததோ இந்தப் பாடல் என வினவலாம். நிகழ்ந்ததொன்றனைக் கூறுகின்றாரேயன்றிப் புலவர் கண்ட கனவு அன்று என்பதுமட்டும் அவற்றால் வரும் பெருமை. இல்லையேல், அவை பொருள் புலப்பாட்டிற்கு வேண்டுவனவே அல்ல. இந்தப் பாட்டில் வரும் பொருள், குட்டுவன், செம்பியன், புல்லி என்ற குறிப்பால் சிறக்கவில்லை. "அகப்பா அழிய நூறிப் பகல் தீ வேட்ட ஞாட்பு" என்ற குறிப்பாலும், "மா மடல் அவிழ்ந்த காந்தளஞ் சாரலின்களிறு பாந்தட்பட்டெனத் துஞ்சாத் துயரத்து அஞ்சுபிடிப் பூசல் நெடுவரை விடரகத் தியம்பும் காடு" என்ற குறிப்பாலுமே இப்பாடல் உயிருள்ளதாகி உணர்ச்சியை ஊட்டுகின்றது.

குட்டுவன், தமிழ் நாட்டின் தென்மேற்கு மூலையில் ஆண்டவன்; புல்லி, வடகிழக்கு மூலையில் வாழ்ந்தவன். தமிழ்நாடு முழுவதும் நம் கண்ணெதிர் இப் பாட்டில் அவ்வாறு தோன்றுகிறது. இதனைக் கடந்து போகின்றான் தலைவன். தாய்நாட்டை—நாகரிக நகரங்கள் படைத்த இன்ப அன்பு நிலையத்தை-விட்டும் போகின்றானே தலைவன் என்பதோர் எண்ணம் பிறக்கின்றது. ஆனால், அங்கும் ஓர் ஆறுதல், புனைந்துரையில் தோன்றுகிறது. நாகரிகத்தின் கொடுமையே பகல் தீ வேட்ட ஞாட்பாகவும், வெளிநாட்டின் அயன்மையே மலைவளம் காட்டுவளம் என்பவற்றோடு தொடர்ந்துநின்று பொருளீட்டும் இடமாகவும் காட்சியளிக்கின்றன. இதனாலும், தலைவியும் தோழியும் ஆறுதல் அன்றோ பெறவேண்டும் ! குட்டுவன்

81

6