உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நற்றிணை நாடகங்கள்.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவத்தைக் கட்டிக்கொள்கிறாள்!

செங்கண்—எங்கும் இதே காட்சி! இருளில் ஒளி—காதற் பொலிவு! காதற் பொலிவு! பொலிக நின் காதல்!

தலைவி: அங்கே ஆற்றின் இறுமாப்பு; இங்கே சேவலின் செம்மாப்பு! எல்லாம் கொண்டான் வலம், வலம், வலம்! எதிரே உள்ள சேவலைப் பார்த்தாயா? இவற்றின் சேர்த்தியின் பொலிவே காதலின் கீர்த்தி! இன்பப் பாட்டு! பிரிந்து எதிர்எதிர் இருந்தாலும், இரண்டுள்ளமும் இரண்டுயிரும் ஒன்றாகிய நிலை அந்தப் பாட்டின் ஒற்றுமையாக முழங்குகிறது. நாமறியோமா இந்தச் செழிப்பும் பாட்டும்! அஃது ஒரு காலம்! இஃது ஒரு காலம்!

தோழி: காதற் காலம்! நம்மையும் அறியாமல் களிப்பு வரும் காலம்! குயிலின் பாட்டு ஒரு களியாட்டம்; பந்தாட்டம்போல ஓர் ஒலியாட்டம்! மாலை மாற்றிக் கொள்வதுபோலச் சேவல் கூவ, அதன் எதிரே பெடை கூவ-இவ்வாறு மாறி மாறி மாமர மணப்பந்தரில் மகிழ்ந்து மலிகின்றன.

தலைவி: காதற் பாட்டு! காதற் பாட்டு: இருதலைக்காமம். சாதற் பாட்டு! சாதற் பாட்டு : ஒருதலைக்காமம்.

தோழி: நல்ல நாளில் கெட்ட பேச்சு—ஆ என்ன இஃது? அந்தப் புது மணம் மறுபடியும் வீசுகிறதே! மாமரத்தின் மணமா? இல்லை, இல்லை!

தலைவி: எல்லாப் பூவுமே மலரும் காலம்! குயில் பாடப் பாட, மனமும் முகமும் மகிழ்ந்து அலர்கின்றன. துன்பத்தின் ஆழம் நம்மிடம்; இன்பத்தின் ஏற்றம் அவற்றினிடம்.

85