உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நற்றிணை நாடகங்கள்.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவத்தைக் கட்டிக்கொள்கிறாள்!

தலைவி: நாமே மறைந்தோம். எந்த மூலையிலேனும் அவர் மனத்தில் ஒதுங்கி ஒடுங்கிக்கிடந்தால் அன்றோ அவர் நினைவிற்கு வருவோம்? அகன்றவர் மறந்தே போனார். கண் மறையக் கருத்து மறையும்.

தோழி: கண் மறையக் கருத்து மறைந்ததா உனக்கு?

தலைவி: நம் மனத்தில் அவர் தவிர வேறொன்றும் இல்லை. அவர் மனத்தில் நாம் இருந்தோம். பொருள் புகுந்தது. குடத்தில் பழைய நீர் இருக்கப் புதுநீர் கொட்டினால் பழைய நீர் ஒருபோது முழுதும் வெளியேறிவிடலாம். அவர் நம்மை விட்டகன்றார். நம்மை மறந்தேபோனார். இளவேனில்......என் செய்யும்? வற்றல் மரம் தளிர்க்குமா?

தோழி: இன்பப் பூங்கொத்து இன்பக் கனவாய்ப் பூத்ததுபோலத் துன்பப் பூங்கொத்துத் துன்பக் கனவாய் உன் மனத்தே மலர்கின்றதோ!—என்ன மறுபடியும் அந்தப் புதுமணம்—உனக்கு வரவில்லையா!

தலைவி: வருகிறது! வந்துதான் என்ன? வயிற்று நோயாளனுக்கு விருந்து மணந்து என்ன பயன்?

தோழி: வயிற்றெரிச்சலே. மிகும். ஈது என்ன பூமணம் என்றால், தெரியும் என்கிறாய்! தெரியச் சொன்னால் அன்றோ! உன் பாட்டே பாடுகிறாயே!

தலைவி: உனக்கு அறிவுத் தினவு - எனக்குத் துன்பத் தினவு! அதுவா? பாதிரிப் பூமணம் - தெரியவில்லையா?

தோழி: என்ன நறுமணம்? பாதிரியா இது?

89