உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நற்றிணை 1.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நற்றிணை தெளிவுரை கடவுள் வாழ்த்து பாடியவர்: பாரதம் பாடிய பெருந்தேவனார். அனைத்துக்கும் ஆதியாகிய பரம்பொருளின், யாதா யினும் ஒரு தோற்ற நிலையினை உள்ளத்தே கற்பித்துக் கொண்டு, அதனைப் போற்றியே ஏதனையும் செய்யத் தொடங்குதல் சான்றோர்களின் பழைய மரபாகும். அந்த மரபினையொட்டியே, இந்தத் தொகை நூலிற்கான போற்றும் கடவுள் வாழ்த்தினையும் திருமாலைப் முறையிலே ஆசிரியர் பெருந்தேவனார் செய்துள்ளனர். மாநிலஞ் சேவடி யாகத், தூநீர் வளைநரல் பௌவம் உடுக்கை யாக, விசும்புமெய் யாகத் திசைகை யாகப். பசுங்கதிர் மதியமொடு சுடர்கண் ணாக இயன்ற வெல்லாம் பயின்று, அகத் தடக்கிய வேத முதல்வன்' என்ப- 'தீதற விளங்கிய திகிரி யோனே.' உலகினிடத்தே உளதான தீயவை அனைத்தும் முற்ற வும் விலகிப் போகுமாறு செய்தலினாலே, 'இவ்வுலகினைக் காத்தற்கு உரியோன்' என்னும் புகழோடு விளக்கம் பெற்றவன், சக்கரப் படையினைத் தரித்தவன் 'திருமால்'. கிய இந்தப் பெரிதான நிலப்பரப்பையே தனது இரு சிவந்த திருப்பாதங்களாகக் கொண்டிருப்பவன்; தூவுகின்ற அலை நீரினைக் கொண்டதும், சங்கினம் ஆரவாரித்துக்கொண் டிருப்பதுமான கடலினையே, தன் அரையிடத்து உடுக்கை ந.-1

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை_1.pdf/10&oldid=1626505" இலிருந்து மீள்விக்கப்பட்டது