உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நற்றிணை 1.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நற்றிணை தெளிவுரை

103


தனையும், அவளைக் கூட்டுவித்தவன் அப் பாண்மகனே என்பதனையும் அறிந்த தோழி, தன்மேலிட்டு அவன் நாணுமாறு புனைந்து கூறியதாம். தலைவி, தன் பெருங் சுற்புத்திறத்தால், தலைவனைப் பழித்தமை செய்த தோழியைச் சினந்துகொள்வாளாகவே. போற்றேன். சிறுமை பெருமையின் காணாது துணிந்தே' என்கின்றாள். இவற்றால், தலைலியின் கற்பு மேம்பாட்டை உரைத்துத் தலைவி என்றும் தலைவனை மறவாதவள் என்பதனை வலியுறுத்தினளாம். 'பாணனிடம், தோழி தலைவிபாற் கூறுவாள்போலக் கூறும் இவற்றைக் கேட்கும் தலைவன், தான் செய்தற்கு நாணினனாகத் தலைபால் குறையிரந்து. அவளைத் தெளிவித்துக் கூடுவான்' என்பது இதன் பயன்.

மேற்கோள் : 'வரையா நாளிடை வந்தோன் முட்டிய வழிக் தலைவி கூறியற்குச் செய்யுள்' என இதனைக் காட்டுவர் இளம்பூரணனார் (தொல். பொருள். சூ, 11 உரை) 'வரையாத நாளின்கண் மறைந்தொழுகா நின்ற தலைவன். செவிலி முதலாயினாரை முட்டின வழி, தலைவி, அவனை அயலான் போலவும், தன்னை நாடிப் பின்வருவான் ஒருவன் போலவும், தான் அவன்பாற் செல்லா மனத்தள் போலவும் காட்டியவளாகத் தங்கள் உறவை மறைத்துக் கூறுவது இதுவென அப்போது கொள்ளல் வேண்டும்.

51. எதனைச் செய்வோம்?

பாடியவர்: பேராலவாயர்.

பேராலவாயர். திணை: குறிஞ்சி. துறை: ஆற்றது ஏதமஞ்சி வேறுபட்டாள், வெறியாடலுற்ற இடத் துச் சிறைப்புறமாகச் சொல்லியது.

[(து - வி) வெறியயர் களத்திலே ஒரு பக்கமாக நின்ற தலைவி, தன்னை நாடி வந்து நின்ற தலைவன், அவ்விடத்தே வருதலால் வரும் துன்பத்திற்கு அஞ்சுகின்றாள். அதனால், மறைய நின்ற அவன் கேட்குமாறு, இவ்வாறு தோழிக்கு உரைப்பாள்போல் உரைத்து, அவனைப் போக்குகின்றாள்.]

யாங்குச் செய்வாம்கொல்-தோழி! ஓங்குகழைக் காம்புடை விடரகம் சிலம்பப் பாம்புஉடன்று ஓங்குவரை மிளிரஆட்டி; வீங்குசெலல் கடுங்குரல் ஏறொடு கனைதுளி தலைஇப்

பெயல்ஆ னாதே, வானம்; பெயலொடு

5

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை_1.pdf/104&oldid=1627226" இலிருந்து மீள்விக்கப்பட்டது