உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நற்றிணை 1.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

110

நற்றிணை தெளிவுரை


அன்பு மிகவும் உடையையாவாய். என்னை வேறாகக் கருதுகின்ற மனப்போக்கினைக் கொள்ளாதே, இதனைக் கேட்பாயாக: தழையுடுப்பவர் கொய்தற்குரிய குழையானது தழைத்திருக்கின்ற இளைதான ஞாழலானது, தெளிந்த சடலலையின் நீல வண்ணப் புறத்தினைத் தடவிக் தொடுக்கும். தாழைமரங்களை வேலியாகவுடைய நும்முடைய துறைக்கு உரிமையுடையவர்க்கு, என் குறைதான் சென்று

இத்தன்மைத்தென அவர் உணரும்படியாகச்

சொல்வாயாக.

கருத்து : 'நாரையே’ நீ யேனும் சென்று, என் குறையை அவர் உணரும் வண்ணம் கூறுவாயாக' என்பதாம்.

சொற்பொருள்: வளைநீர்- வளைந்த தன்மை: எழுந்தும் தாழ்ந்தும் தோன்றும் அவைகளால் உண்டாகும் நீர்ப்பரப்பின் தோற்றம்; அதனையுடைய கடலைக் குறித்தது. வளைநீர் - வளைகளையுடைய நீரும் ஆம்; வளை சங்கு. வாப்பறை - தாவிப்பறத்தல். நொதுமல் அயன்மை; வேறுபட்ட தன்மை. குமரி - இளமை. ஞாழல் குங்கும மரம்: கோங்க மரம்; மயிர்க்கொன்றை முதலாயின. இது தனி மரவகை

என்பாரும் உளர்ா முள்ளியும் ஆம்; விளக்கம் : 'கிளையொடு சென்று மேய்ந்து அந்த இன்பச் செவ்வியினாலே தாவிப் பறந்து களித்தலை னைக்கும் குருகாதலால் அது கிளையான தன்னைப் பிரிந்து வாழும் தலைவனது செயலின் கொடுமையை உணரும் எனக் கருதினாள், அவ்வாறு அதனை விளிக் கின்றாள். 'புலாலுண்ணும் நின் கிளையோடிருந்து கேண்மதி' என்றது, 'நீதான் மறப்பினும், பெண்மைத் துயரைக் கேட்கும நின் கிளைகள். தாம் மறவாதே நினக்கு நினைப்பூட்டும்' எனக் கூறியதாம். 'அது நீ அறியின் என்றது. கிளையோடிருக்கும் அது அதனை அறியமாட் டாமையால், அறிய உணர்த்துவதாம். மெல்லியலாரான மகளிர்க்குப் பெருவருத்தம் தருதலால், மாலையைச் புன் மாலை' என்றனள். 'நொதுமல் நெஞ்சம் கொள்ளாது என்றது, தன்னையும் அதற்கோர் உறவுபோலக் வேண்டும் எறைதாம்.

சிறு

கருக

கொய்குழை அரும்பிய குமரி ஞாழல், தெண்திரை மணிப்புறம் தைவரும் துறைகிழவோன்' என்றது. அவ்வாறே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை_1.pdf/111&oldid=1627233" இலிருந்து மீள்விக்கப்பட்டது